2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

கடந்த ஏப்ரல் 25ம் தேதி மலையாளத்தில் மோகன்லால் நடித்த 'தொடரும்' திரைப்படம் வெளியானது. தருண் மூர்த்தி இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் மோகன்லாலின் ஜோடியாக ஷோபனா நடித்திருந்தார். ஒரு சாதாரண டாக்ஸி டிரைவர் எதிர்பாராத விதமாக போலீஸ் ஸ்டேஷன் வாசலை மிதிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது அதைத் தொடர்ந்து அவரது வாழ்வில் நடைபெறும் சம்பவங்களை விறுவிறுப்பாக கமர்சியலாக இந்த படத்தில் சொல்லியிருந்தார்கள். படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று 200 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
பொதுவாகவே சமீப காலமாக எவ்வளவு பெரிய படம் என்றாலும் அது வெளியாகி நான்கு வாரங்கள் முடிந்து நிலையில் ஓடிடி.,யில் வெளியாவது வாடிக்கையாக இருந்து வருகிறது. ஆனால் இந்த தொடரும் படம் வெளியாகி நான்கு வாரங்கள் முடிந்த நிலையில் இதன் ஓடிடி ரிலீஸ் குறித்து இப்போது வரை அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இந்த படத்திற்கு தற்போதும் திரையரங்குகளில் நல்ல கூட்டம் வந்து கொண்டு இருப்பதாலும் அடுத்த சில நாட்களுக்கு பெரிய படங்கள் வெளியீடு என எதுவும் இல்லை என்பதாலும் இந்த ஓட்டத்தை தடை செய்ய வேண்டாம் என்பதற்காக, இதன் ஓடிடி ரிலீஸ் இன்னும் சில வாரங்கள் தள்ளி போகலாம் என்கிற தகவலும் வெளியாகி உள்ளது.