யாரிடமும் உதவி கேட்காதீங்க : செல்வராகவன் | தாலாட்டுதே வானம்... என தாலாட்டி சென்ற ஜெயச்சந்திரனின் பிறந்தநாள் இன்று! | பாலா விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? லைலா விளக்கம் | போஸ்ட் புரொக்ஷன் ஸ்டூடியோ திறந்தார் ஏ.எல்.விஜய் | பிளாஷ்பேக் : வெளிமாநிலத்தில் வெள்ளி விழா கொண்டாடிய முதல் படம் | பிளாஷ்பேக் : 10 வருட இடைவெளியில் படமாக உருவான ஒரே கதை | நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு | என் மடியில் வளர்ந்த சிறுவன் இன்று பான் இந்திய ஸ்டார் ; நடிகர் பாபு ஆண்டனி பெருமிதம் | ஜூனியர் குஞ்சாக்கோ போபனாக நடித்தவர் அவருக்கே வில்லனாக மாறிய அதிசயம் | நான் அவள் இல்லை ; டீப் பேக் வீடியோ குறித்து வித்யா பாலன் எச்சரிக்கை |
சின்னத்திரை நடிகரான நேத்ரன் அண்மையில் புற்று நோய் பாதிப்பால் உயிரிழந்தார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல வருடங்களாக சின்னத்திரையிலும் சினிமாவிலும் பயணித்து அவரது மரணம் திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்தது. நேத்ரன் சக நடிகையான தீபா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு அபிநயா, அஞ்சனா என இருமகள்கள் உள்ளனர். இதில் அபிநயா, நேத்ரன் இறப்பதற்கு சில தினங்களுக்கு முன் தான் சீரியலில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேத்ரனின் மறைவுக்கு பின் முதல் முறையாக ஊடகமொன்றில் பேட்டியளித்த அவரது மனைவி தீபா, நேத்ரன் குறித்து ரசிகர்கள் அறியாத பல தகவல்களையும், அவரது மரணம் குறித்தும் மனம் திறந்து பேசியிருக்கிறார். அவரது பேட்டியில், 'நேத்ரனின் அப்பா எம்.ஜி.ஆர், வீ.கே.ராமசாமி ஆகியோருக்கு மேக்கப் ஆர்ட்டிஸ்டாக இருந்தவர். இதன் காரணமாகத்தான் நேத்ரனுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. நடிகர் ரஜினிகாந்த் நடித்த ராகவேந்திரா படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நேத்ரன், தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். அதன்பிறகு சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்' என்று கூறியுள்ளார்.
நேத்ரனின் இறப்பு குறித்து பேசிய தீபா, 'நேத்ரன் இறந்த அன்று காலை அவருக்கு கடுமையான வயிற்று வலி வந்தது. ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிச் சென்றபோது மனதை தைரியமா வச்சுக்கோங்க என்று மருத்துவர்கள் கூறினார்கள். நாங்கள் தான் கேன்சருக்கு ட்ரீட்மெண்ட் எடுத்துவிட்டோமே என்று கேட்டேன். ஆனால், நேத்ரனுக்கு நோய் உடம்பு முழுக்க பரவி பாதிப்பு ஏற்பட்டுவிட்டதாக மருத்துவர்கள் கூறினார்கள். நேத்ரனுக்கு ஆரம்பத்தில் இதயத்தில் ஒரு சிறிய பிரச்னை இருந்தது. அதை ஹோமியபதி சிகிச்சை முறையில் சரி செய்தோம்.
எனவே, அவருக்கு வயிற்று வலி வந்தபோதும் முதலில் ஹோமியோபதி சிகிச்சையின் மூலம் சரிசெய்து விடலாம் என்று தான் நம்பினோம். அப்போதே வயிறை ஸ்கேன் எடுத்து பார்த்திருந்தால் இவ்வளவு பெரிய பிரச்னை வந்திருக்காது' என மிகவும் வருத்தத்துடன் கூறினார். மேலும், நேத்ரனுடன் பிறந்தவர்கள் 11 பேர் இருக்கிறார்கள். அதிலும் எனக்கு ஆறு நாத்தனார்கள் (நேத்ரனின் சகோதரிகள்) இருந்தும் ஒருவர் கூட உதவவில்லை என மிகவும் வருத்தத்துடன் தீபா அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.