இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
ராஞ்சனா, அட்ராங்கி ரே படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ஹிந்தியில் தனுஷ் நடிக்கிறார். இந்த படத்திற்கு 'தெரே இஸ்க் மெயின்' என தலைப்பிட்டுள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படம் அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் தனுஷ் மற்ற படங்களில் நடித்து வந்ததால் இதன் படப்பிடிப்பில் பங்கேற்க முடியாமல் இருந்தது. இப்போது படப்பிடிப்பை துவங்கி உள்ளதாக தெரிகிறது.
இதில் தனுஷிற்கு ஜோடியாக கிர்த்தி சனோன் நடிப்பதாக ஏற்கனவே தகவல் வந்தது. இப்போது அதை அதிகாரப்பூர்வமாக ஒரு முன்னோட்ட வீடியோ உடன் அறிவித்துள்ளனர். இந்த வீடியோவில் தெருக்களில் வன்முறைகள் நடக்க, கையில் பெட்ரோல் கேன் உடன் வரும் கிர்த்தி அதை தலையில் உற்றி வாயில் சிகரெட்டை வைத்து லைட்டரை ஆன் செய்வது போன்று காட்சிகள் உள்ளன. இதில் கிர்த்தி சனோன் 'முக்தி' எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என குறிப்பிட்டுள்ளனர். மேலும் இந்த படம் வரும் நவ., 28ம் தேதி திரைக்கு வருகிறது என அறிவித்துள்ளனர்.