வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' | துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் |
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் இணைந்து நடித்துள்ள படம் 'காதலிக்க நேரமில்லை' . இப்படம் வருகின்ற ஜனவரி 14ம் தேதி திரைக்கு வருகிறது. இதையொட்டி நித்யா மேனன் அளித்த பேட்டியில் இயக்குனர் மிஷ்கினும் கலந்து கொண்டார்.
அப்போது மிஷ்கின் கூறியதாவது, "இயக்குனர் பாண்டிராஜ் அவரது இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் இருவருடனும் இணைந்து நடிக்கும் ஒரு வாய்பை எனக்கு கொண்டு வந்தார். 45 நாட்கள் கால்ஷீட் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என கேட்டார். எனக்கு 5 கோடி சம்பள தொகையாக கேட்டேன். பாண்டியராஜ் ஓடிவிட்டார். அதன் பிறகு வரவில்லை. ஆனால், அது ஒரு நல்ல கதாபாத்திரம்" என்றார்.