துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் | 100 கோடியைக் கடந்த 'ஸ்கை போர்ஸ்' | 'என் இனிய பொன் நிலாவே' பாடல் : இளையராஜாவுக்கு உரிமையில்லை என நீதிமன்றம் தீர்ப்பு | 'பராசக்தி' தலைப்பு தொடரும் சிக்கல் ? | பொங்கல் படங்களில் தாக்குப் பிடிக்கும் 'மத கஜ ராஜா' |
இசையமைப்பாளர் தமன் பெரும்பாலும் தெலுங்கு படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அவ்வப்போது தமிழ் படங்களுக்கு இசையமைப்பார். அடுத்து நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இதில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கின்றார்.
தற்போது தமன் அளித்த பேட்டியில், ஜேசன் சஞ்சய் படம் குறித்து கூறியதாவது, "ஜேசன் சஞ்சய் குறித்து இன்னும் ஆச்சரியத்தில் தான் உள்ளேன். அவரின் முதல் படத்தின் கதையை கேட்டு அதிர்ச்சி ஆகிவிட்டேன். அந்த கதைக்கு எளிதில் பெரிய ஹீரோக்களின் கால்ஷீட் கிடைக்கும். ஆனாலும், அந்த கதைக்கு சந்தீப் கிஷன் தான் சரியாக இருப்பார் என்கிற முடிவில் உறுதியாக இருந்தார். அவருக்கு தான் விஜய்யின் மகன் என்கிற கர்வம் இல்லை. அவருடன் நிறைய ஜோக் அடித்து சிரித்து கொண்டிருப்போம். மிகவும் எளிமையானவர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.