விஜய் சேதுபதி நடித்த ஐம்பதாவது படம் 'மகாராஜா'. நித்திலன் சாமிநாதன் இயக்கிய இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் அனுராக் காஷ்யப், மோகன்தாஸ், நட்டி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். 100 கோடி வசூல் சாதனை செய்த இந்த படம் சீனாவிலும் டப் செய்யப்பட்டு வெளியானது. இந்த நிலையில் இந்த மகாராஜா படத்தை தயாரித்த பேஷன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்திலும் நடிக்கப் போகிறார் விஜய் சேதுபதி. இந்த படத்தை 'இன்று நேற்று நாளை, அயலான்' போன்ற படங்களை இயக்கிய ரவிக்குமார் இயக்குகிறார். இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.