ஒரே நாளில் 3 படங்கள் ; மூன்றிலும் வீணடிக்கப்பட்ட வில்லன் நடிகர் | ஹரிஷ் கல்யாண் 15வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | நேருக்கு நேர் மோதும் சந்தானம், சூரி படங்கள்! | தமிழ் மொழிக்கான பெருமைச்சின்னம்: ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு | கிரிக்கெட் வீரரின் பயோபிக் படத்தை இயக்கும் பா.ரஞ்சித்! | காரில் வெடிகுண்டு வைத்து தகர்ப்போம்! சல்மான்கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்! | புதிய வருடம் புதிய லைப் - ‛தக்லைப்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகிறது! | மாரியம்மன் கோவில் விழாவில் பாட்டு பாடி நடனமாடிய ரம்யா நம்பீசன்! | பிளாஷ்பேக்: கதையால் ஈர்க்கப்பட்டு “காவியத் தலைவி”யான நடிகை சவுகார் ஜானகி | சிம்பு 49வது படத்தில் இணைந்த சாய் அபியன்கர்! |
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், திரிஷா, அர்ஜுன், ஆதவ், ரெஜினா, யோகி பாபு உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் 'விடாமுயற்சி'. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் பொங்கலுக்கு ரிலீசாக இருந்த நிலையில் பின்வாங்கி விட்டது. அடுத்து ஜனவரி இறுதியில் வெளியாகும் என்று கூறுகிறார்கள்.
இந்த நேரத்தில் இந்த விடாமுயற்சி படத்தின் சென்சார் சான்றிதழ் குறித்த ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, இந்த விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 2 மணி நேரம் 30 நிமிடம் 40 வினாடிகள் ரன்னிங் டைம் கொண்ட இந்த படத்தில் இடம்பெற்ற கெட்ட வார்த்தைகளை ஐந்து இடங்களில் சென்சார் போர்டு கத்தரித்துள்ளதாம்.