புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் | பிளாஷ்பேக் : பராசக்தி உருவான கதை இதுதான் | ஆமீர்கான் விரைவில் மூன்றாவது திருமணம்? | வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' | துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 |
'நாச்சியார், வர்மா' படங்களுக்கு பிறகு பாலா இயக்கி உள்ள படம் 'வணங்கான்'. அருண் விஜய் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ரோஷினி பிரகாஷ் நடித்திருக்கிறார். அவர்களுடன் சமுத்திரகனி, மிஷ்கின், ராதாரவி, சிங்கம்புலி, அருள்தாஸ் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் ஜனவரி 10ம் தேதியான நாளை திரைக்கு வருகிறது.
இந்த படம் குறித்து நடிகர் அருண் விஜய் கூறும்போது, ''இந்த வணங்கான் படம் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்தமான ஒரு படமாக இருக்கும். அந்த அளவுக்கு மிகவும் எதார்த்தமான ஒரு கதையில் உருவாகியுள்ளது. அதோடு இந்த வணங்கான், பாலா எப்படிப்பட்ட இயக்குனர் என்பதை இன்றைய இளைய தலைமுறை ரசிகர்களுக்கு அடையாளப்படுத்தும் ஒரு படமாகவும் இருக்கும். பாலா இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற எனது நீண்ட நாள் கனவு நனவாகியுள்ளது'' என்கிறார்.