சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' |
தெலுங்கு, தமிழ் என இசையமைப்பில் பிஸியாக இருப்பவர் தமன். அவர் இசையில் பவன் கல்யாண் நடித்து வெளிவந்த 'ஓஜி' படம் பெரிய வெற்றியைப் பெற்று 300 கோடி வசூலைக் கடந்துள்ளது. அந்தப் படத்தின் புரமோஷனுக்காக அமெரிக்கா சென்றிருந்தார் தமன்.
அங்கு அவற்றை முடித்த பின் இந்தியா வரும் வழியில் விமானத்தில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை சந்தித்துள்ளார். அந்த சந்திப்பு பற்றி தமன், “கிரிக்கெட் கடவுள் சச்சினுடன் பயணம். டல்லாஸ் முதல் துபாய் வரை அவருடன் பயணித்தேன். அவரிடம் சிசிஎல் போட்டிகளில் நான் கிரிக்கெட் விளையாடிய வீடியோவைக் காட்டினேன். உனக்கு சிறந்த பேட்டிங் வேகம் உள்ளது என்று பாராட்டினார். அவருடன் விரைவில் பணி செய்வேன் என நினைக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தமன் இசையமைக்கும் நேரம் போக அவரது நண்பர்களுடன் அடிக்கடி கிரிக்கெட் விளையாடுவதை வழக்கமாக வைத்திருப்பவர். தீவிர கிரிக்கெட் ரசிகர். சச்சின் அவரைப் பாராட்டியது தமனுக்குத் தாங்க முடியாத மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கும்.