Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனை சந்திக்க அல்லு அர்ஜூனுக்கு போலீஸ் நிபந்தனை

06 ஜன, 2025 - 12:23 IST
எழுத்தின் அளவு:
Police-condition-Allu-Arjun-to-meet-injured-boy-in-traffic-jam


'புஷ்பா 2' படம் திரையிட்ட தியேட்டரில் ரேவதி என்ற பெண் உயிரிந்த வழக்கில் அல்லு அர்ஜூன் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் அளித்தது. ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் காவல் நிலையம் சென்று விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும் என்பது ஒரு நிபந்தனை. அதன்படி நேற்று சிக்கடப்பள்ளி காவல் நிலையத்தில் ஆஜரானார்.

இன்னொருபுறம் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் சிறுவன் தேஜ்ஜை பார்க்க அனுமதி கேட்டு போலீசில் அல்லு அர்ஜுன் மனு செய்திருந்தார். இதற்கு பதில் அளித்து போலீசார் அனுப்பியுள்ள நோட்டீசில் கூறப்பட்டிருப்பதாவது:

'மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஸ்ரீ தேஜ்ஜை காண வந்தால் அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கும், மருத்துவமனை நிர்வாகத்துக்கும் சிரமத்தை ஏற்படுத்தும். இருப்பினும் நீங்கள் செல்ல விரும்பினால் காவல் நிலையத்துக்கும், மருத்துவமனைக்கும் முன்கூட்டியே தெரிவித்தால் வந்து செல்லும் வழித்தடத்தை ரகசியமாக வைத்து அனுப்ப ஏற்பாடு செய்யப்படும். ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் நீங்கள் தான் முழு பொறுப்பேற்க வேண்டும்' என நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் அல்லு அர்ஜுன் சிறுவனை சந்திக்கும் திட்டத்தை தற்காலிகமாக தள்ளி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
காயம் பட்ட எம்எல்ஏவை பார்க்காமல் சென்ற திவ்யா உன்னி ; விளாசும் நடிகை காயத்ரி வர்ஷாகாயம் பட்ட எம்எல்ஏவை பார்க்காமல் ... கேம் சேஞ்சர் விழாவில் கலந்துகொண்டு திரும்பிய இரண்டு ரசிகர்கள் விபத்தில் பலி கேம் சேஞ்சர் விழாவில் கலந்துகொண்டு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)