ஜூலை 25ல் ‛அவதார் 3' டிரைலர் | இசை நிகழ்ச்சி! கெனிஷா உடன் இலங்கை சென்ற ரவி மோகன் | ‛பராசக்தி' படத்தில் இணைந்த ராணா | வார் 2 படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு | மாரி செல்வராஜின் 'பைசன்' பிஸினஸ் எப்படி? | இறுதிக்கட்டத்தை எட்டிய ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் படம் | இலங்கை தமிழ் படத்தில் டி.ஜே.பானு | புராண அனிமேஷன் படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | வசூலை குவிக்க அடுத்து வருகிறது 'ட்ரான்: ஏரிஸ்' | அனிருத் இசை நிகழ்ச்சி திடீர் ரத்து |
பாலிவுட் முன்னணி நடிகரான ஷாருக்கானுக்கு மும்பை மன்னாட்டில் மிகப் பிரம்மாண்டமான வீடு உள்ளது. ஆனால் அவர் இந்த வீட்டை சீரமைப்பதற்காக நீண்ட நாட்களாகவே திட்டமிட்டு வந்தார். அந்த வகையில் வரும் மே மாதம் முதல் மராமத்து பணிகள் துவங்க இருக்கின்றன. இதனை தொடர்ந்து தற்போது பாந்த்ரா பகுதியில் உள்ள புதிய அபார்ட்மெண்ட் ஒன்றுக்கு குடிபெயர்ந்துள்ளார் ஷாருக்கான்.
இந்த அப்பார்ட்மெண்டில் நான்கு தளங்களை மொத்தமாக ஷாருக்கான் வாடகைக்கு எடுத்துள்ளார். நான்கு தளங்களுக்கும் சேர்த்து மாத வாடகை 24 லட்சம் ரூபாய் என்று சொல்லப்படுகிறது. இதில் தானும் தனது குடும்பமும் தவிர தனது பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு நிர்வாகிகள் அனைவரும் தங்குவதற்கும் இந்த நான்கு தளங்களில் ஏற்பாடுகளை ஒதுக்கி கொடுத்துள்ளாராம் ஷாருக்கான்.