ஆண்களுக்கும் 'பீரியட்ஸ்' ; சலசலப்பை கிளப்பிய ராஷ்மிகாவின் கருத்துக்கு பெருகும் ஆதரவு | ரூ.100 கோடி வசூலை குவித்த 'டியூட்' முதல் வரிசை கட்டும் இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பிரதமர் மோடியின் அம்மா வேடத்தில் நடிக்கும் ரவீனா டாண்டன் | ஜேசன் சஞ்சய் எடுத்த சரியான முடிவு : விக்ராந்த் வெளியிட்ட தகவல் | உபேந்திரா-பிரியங்கா திரிவேதி மொபைல் போன்களை ஹேக் செய்த பீஹார் வாலிபர் கைது | லோகா படத்தின் புதிய பாகத்தில் மம்முட்டி : துல்கர் சல்மான் தகவல் | நாகார்ஜுனா மீதான அவதூறு கருத்துக்கு ஒரு வருடம் கழித்து வருத்தம் தெரிவித்த தெலுங்கானா அமைச்சர் | சின்மயியிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்த ஜானி மாஸ்டரின் மனைவி | 'ஜனநாயகன்' வாங்குவதில் வினியோகஸ்தர்கள் தயக்கம் ? | ராஜமவுலி, மகேஷ்பாபு பட தலைப்பு அறிவிப்பு விழா, பிரம்மாண்ட ஏற்பாடுகள் |

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ரெட்ரோ திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. இந்த படத்தின் டிரைலர் மற்றும் அது உருவாக்கப்பட்ட விதம் என இரண்டுமே ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது. ஆச்சரியமாக இந்த படத்தின் ட்ரைலரை உருவாக்கியது பிரபல மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் தான். இதற்காக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், இயக்குனர் அல்போன்ஸ் புத்ரனுக்கு நன்றி தெரிவித்து ஒரு போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்.
இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் நேரம் படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமாவதற்கு முன்பு இருந்தே அவர் சென்னையில் தங்கியிருந்து தான் சினிமாவுக்கான வாய்ப்புகளைத் தேடிக் கொண்டிருந்தார்.. பல குறும்படங்களில் பணியாற்றினார்.. அப்போது இருந்தே அவரும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், பாபி சிம்ஹா எல்லோருமே நெருங்கிய நண்பர்கள் தான்.
கார்த்திக் சுப்புராஜின் பல குறும்படங்களுக்கு படத்தொகுப்பு உள்ளிட்ட பணிகளில் இணைந்து பணியாற்றியுள்ளார் அல்போன்ஸ் புத்ரன். இதே போல கடந்த சில வருடங்களுக்கு முன்பு பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடித்த ஒப்பம் திரைப்படம் வெளியான போது கூட அதற்கு அல்போன்ஸ் புத்திரன் தான் ட்ரைலரை உருவாக்கி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.