ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் | கிடப்பில் இருக்கும் பிரபுதேவா படத்தை வெளியிட முயற்சி | உருட்டு உருட்டு : நாகேஷ் பேரன் நாயகனாக நடிக்கும் படம் | இசை அமைப்பாளர் பயணம் தொடரும் : சக்திஸ்ரீ கோபாலன் | கரம் மசாலா : விமல், யோகி பாவுவின் காமெடி படம் | பிளாஷ்பேக் : ரஜினி கேட்டும் கிளைமாக்ஸை மாற்றாத மகேந்திரன் | பிளாஷ்பேக்: சினிமாவை உதறிவிட்டு ராணுவத்திற்கு சென்ற நடிகர் | மீண்டும் கைகோர்க்கும் 'பேட்ட' கூட்டணி |
அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க உள்ள படத்தின் அறிவிப்பு ஒரு வாரத்திற்கு முன்பாக வெளிவந்தது. அதன்பின் படம் பற்றிய வேறு எந்த அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை. இருந்தாலும் டோலிவுட் வட்டாரங்களில் இந்தப் படம் பற்றி சில தகவல்கள் பரவி வருகின்றன.
முதலில் படத்தில் இரண்டு ஹீரோயின்கள் என்றார்கள். ஆனால், தற்போது மூன்று ஹீரோயின்கள் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தன்னிடம் தேதிகள் இல்லாததால் பிரியங்கா சோப்ரா நடிக்கவில்லை என்று சொல்லப்பட்டது. அதனால், மற்ற முன்னணி பாலிவுட் நடிகைகளிடம் பேசி வருகிறார்களாம். ஜான்வி கபூர் நடிப்பது ஏறக்குறைய உறுதி என்கிறார்கள். மற்ற இரண்டு ஹீரோயின்களுக்காக அட்லி குழுவினர் மும்பையில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம். விரைவில் அவர்கள் யார் என்பது முடிவு செய்யப்பட்டுவிடுமாம். இந்த வருடத்திற்குள் படப்பிடிப்பை நடத்தி முடிக்க வேண்டுமென்பதால் அதற்கேற்றபடி கதாநாயகி தேர்வு இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளார் என்பது கோலிவுட் தகவல். இந்தப் படம் பற்றிய பேச்சுவார்த்தை ஆரம்பமான உடனேயே அவர்தான் இசை என்று முடிவு செய்துவிட்டார்கள். அனிருத் இந்தப் படத்தில் இடம் பெறாதது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.