பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! |
கன்னட நடிகையான பிரியங்கா மோகன், தமிழில் டாக்டர், எதற்கும் துணிந்தவன், டான், கேப்டன் மில்லர் போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்தார். தனுஷ் இயக்கிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார். இன்ஸ்டாகிராமில் 6 மில்லியன் பாலோயர்களை கொண்டுள்ள பிரியங்கா மோகன், சமீபத்தில் துருக்கி நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார். அது குறித்த புகைப்படங்களை வெளியிட்டிருக்கும் அவர், ஒரு பதிவு போட்டு உள்ளார்.
அதில், துருக்கி நாட்டுக்கு செல்ல வேண்டும் என்ற என்னுடைய நீண்ட நாள் கனவு இப்போதுதான் நனவாகி இருக்கிறது. அந்த நாட்டின் அற்புதமான கடற்கரையில் ஏராளமான அதிசயங்கள் இருந்தன. அங்குள்ள ஒவ்வொரு நகரமும் பல மாயாஜாலங்களைக் கொண்டு இருக்கிறது. அவற்றை நான் உற்சாகத்துடன் மகிழ்ச்சியுடனும் கண்டு ரசித்தேன். இந்த பயண அனுபவத்தை என்னால் மறக்கவே முடியாது அப்படியொரு அற்புதமான பயணம் என்று அந்த பதிவில் தெரிவித்திருக்கிறார். பிரியங்கா மோகனின் இந்த பதிவுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் லைக் செய்துள்ளார்கள் .