ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
புஷ்பா 2 படத்தின் வெற்றிக்குப் பிறகு தற்போது அட்லி இயக்கும் தனது 22வது படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி உள்ளார் அல்லு அர்ஜுன். 600 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம் சயின்ஸ் பிக்ஷன் கதையில் உருவாகிறது. இப்படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், அல்லு அர்ஜுனை வாழ்த்தி தனது இணையப்பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார் சமந்தா.
அதில், இந்த அபாரமான நடிகரின் வளர்ச்சியை காண பொறுமையாக இருக்க முடியவில்லை. திரையில் உங்களைப் பார்த்தாலே இன்ப அதிர்ச்சிதான். உங்களது எல்லைகளை தாண்டி ஒவ்வொரு முறையும் அளிக்கும் பங்களிப்பு அபாரம். உங்களின் ஆரோக்கியம் ஆற்றல் குறையாமல் இருந்து நீங்கள் நேசிக்கும் காரியங்களை தொடர்ந்து சிறப்பாக செய்ய இறைவன் உங்களை ஆசீர்வதிக்கட்டும் என்று அந்த பதிவில் தெரிவித்து இருக்கிறார் சமந்தா. அவர் வெளியிட்டுள்ள இந்த பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.