தேவரா படத்திற்கு பிறகு வார் 2 ஹிந்தி படத்தில் நடித்து வந்த ஜூனியர் என்டிஆர், தற்போது அப்படத்தில் நடித்து முடித்துவிட்ட நிலையில் ஏப்ரல் 22ம் தேதி முதல் தனது 31வது படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். கேஜிஎப் பிரசாந்த் நீல் இப்படத்தை இயக்குகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ், என்டிஆர் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படம் 350 கோடி பட்ஜெட்டில் உருவாகிறது. மேலும் வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படம் 2026ம் ஆண்டு பொங்கலை ஒட்டி ஜனவரி ஒன்பதாம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதே ஜனவரி ஒன்பதாம் தேதி ஜூனியர் என்டிஆர் நடிக்கும் இந்த 31வது படமும் வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளனர்.