வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' | துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் |
அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளிவந்த படம் 'புஷ்பா 2'. இப்படம் தற்போது 1400 கோடி வசூலைக் கடந்துள்ளது. இருந்தாலும் கடந்த சில தினங்களுக்கு முன்புதான் இப்படம் 'பிரேக் ஈவன்' ஆனது. தற்போதுதான் லாபக் கணக்கை ஆரம்பித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இப்படத்தின் வியாபாரம் ஒட்டுமொத்தமாக சுமார் 600 கோடி ரூபாய்க்கு நடந்தது. அவ்வளவு தொகையை வசூலிக்க வேண்டுமென்றால் ஏறக்குறைய இரண்டு மடங்கு அளவுக்காவது வசூல் கிடைக்க வேண்டும். அந்த வசூல் சில தினங்களுக்கு முன்புதான் கிடைத்தது.
இப்படம் தெலுங்கில் மட்டும் 200 கோடி ரூபாய்க்கு வியாபாரம் ஆனது. அங்கு தற்போதுதான் அந்த அசல் தொகை வசூலை அடைந்துள்ளதாம். அடுத்து வரும் வசூல்தான் அங்கு லாபக் கணக்கில் சேரும். அதேசமயம் மற்ற மாநிலங்களில் இப்படம் கடந்த வாரத்திலேயே லாபக் கணக்கை ஆரம்பித்துவிட்டது என்கிறார்கள்.
படத்தைப் பொறுத்தவரையில் தயாரிப்பாளருக்கு மிகப் பெரும் லாபம். ஓடிடி, சாட்டிலைட் டிவி உரிமை, இசை உரிமை இதர உரிமைகள் என அதில் மட்டுமே குறைந்த பட்சம் 300 கோடி வரை கிடைத்திருக்கலாம் என்பது தகவல். தியேட்டர் வசூல் மூலமும் பல கோடிகள் கிடைக்கும்.