Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வணங்கான் டிரைலர் பார்த்து முகம் மாறிய சூர்யா

19 டிச, 2024 - 02:58 IST
எழுத்தின் அளவு:
Suriyas-face-changed-after-watching-the-trailer-of-Vanagan


'சேது' படம் மூலம் வெற்றிகரமான இயக்குனராக அறிமுகமாகிய இயக்குனர் பாலா, திரையுலகில் நுழைந்து 25 வருடங்கள் ஆகிவிட்டது. இதை நேற்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஒரு விழாவாக எடுத்துக் கொண்டாடினார். இது பாலாவின் 25வது வருட கொண்டாட்ட விழாவாகவும் அவர் தற்போது இயக்கி விரைவில் வெளியாகவுள்ள வணங்கான் படத்தின் இசை வெளியீட்டு விழாவாகவும் சேர்ந்து நடைபெற்றது. இந்த நிகழ்வில் பல்வேறு இயக்குனர்கள், நட்சத்திரங்கள் வருகை தந்து கலந்து கொண்டார்கள் என்றாலும் அதிகமாக எதிர்பார்க்கப்பட்டது நடிகர்கள் சூர்யாவும் விக்ரமும் வருவார்களா என்பது தான்.

காரணம் பாலாவின் மூலம் திரையுலகில் திருப்புமுனை பெற்ற இவர்கள் இருவரும் தற்போது பாலாவுடன் மனக்கசப்பு ஏற்பட்டு அவரிடம் இருந்து பிரிந்து நிற்கின்றனர். குறிப்பாக விக்ரம் மகனை வைத்து பாலா இயக்கிய 'வர்மா' படத்தின் மூலம் அவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதேபோல சூர்யா தானே தயாரித்து பாலா இயக்கத்தில் நடித்த 'வணங்கான்' திரைப்படத்திலும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த படத்தில் இருந்து விலகினார். தற்போது அதற்கு பதிலாக அருண் விஜய் அந்த படத்தில் நடித்துள்ளார். இப்படிப்பட்ட சூழலில் இந்த விழாவில் யாரும் எதிர்பாராத விதமாக நடிகர் சூர்யா தனது தந்தை சிவகுமாருடன் சேர்ந்து வந்து கலந்து கொண்டார்; ஆனால் விக்ரம் வரவில்லை.

இந்த நிகழ்வில் வணங்கான் படத்தின் டிரைலர் திரையிடப்பட்டது. படத்தின் டிரைலர் நன்றாக இருப்பதாக பார்த்த அனைவருமே கூறி வருகிறார்கள். அப்படி டிரைலர் திரையிடப்பட்ட போது அதை பார்த்த சூர்யாவின் முக பாவனைகளை ஸ்கிரீனில் அடிக்கடி காட்டினார்கள். அப்போது சூர்யாவின் முகம் கொஞ்சம் இறுக்கமாக இருந்ததை பார்க்க முடிந்தது. இந்த படத்தின் கதையோ காட்சிகளையோ பெரிய அளவில் தெரியாமல் தான் அந்த படத்தில் பாலா சொல்வதை மட்டுமே கேட்டு சில நாட்கள் நடித்து வந்தார் சூர்யா. அதன்பிறகு முழு ஸ்கிரிப்ட் தெரியாமல் நடிக்க முடியாது என்று கூறித்தான் அவர் விலகியதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இந்த டிரைலரை பார்க்கும்போதே படமும் நன்றாக வந்திருக்கும் என்பது போல சூர்யா உணர்ந்ததால் தான் அவரது முகம் மாறியது என்றும் சிலர் சொல்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
விஜய்யும் தயங்கினார்.. ஷாருக்கும் நம்பவில்லை ; மனம் திறந்த அட்லிவிஜய்யும் தயங்கினார்.. ஷாருக்கும் ... லாபக் கணக்கை ஆரம்பித்த 'புஷ்பா 2' லாபக் கணக்கை ஆரம்பித்த 'புஷ்பா 2'

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

SUBRAMANIAN P - chennai,இந்தியா
23 டிச, 2024 - 03:12 Report Abuse
SUBRAMANIAN P அடுத்து பாலா எடுக்கப்போற படத்துல சூர்யா நடிக்கிறாராம். படம் பெயர், சுணங்கான். அடுத்த இரண்டு படம், குஞ்சான், தேரான்.. மக்களுக்கு பைத்தியம் பிடிக்கும் வரை.
Rate this:
20 டிச, 2024 - 11:12 Report Abuse
Santhosh Kumar இருவர் மீதும் தவறு உள்ளது.. சூர்யாவும் பொறுமையாக இருந்திருக்க வேண்டும்... பாலாவும் கதை சொல்லிருக்க வேண்டும்... ஆனால் arun vijay தான் நடிக்க வேண்டும் என்பது தான் விதி... திறமைகள் இருந்தும் ஜெயிக்க முடியாத அருண்க்கு இந்த படம் நல்ல ஹிட்டாக அமையும்.. நல்ல நடிகைரை பாலா தேர்வு செய்துள்ளார்.. வாழ்த்துக்கள் விஜய்
Rate this:
19 டிச, 2024 - 09:12 Report Abuse
surya krishna surya enra sravanan oru kullanari. nanri ketta nayavanjakan.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)