இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உருவான 'புஷ்பா 2' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி முதல் பாகத்தைப் போலவே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்திலும் நாயகன் அல்லு அர்ஜுன், நாயகி ராஷ்மிகா மற்றும் வில்லன் பஹத் பாசில் ஆகியோரின் நடிப்பு ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. குறிப்பாக முதல் பாகத்தை விட இந்த இரண்டாம் பாகத்தில் நடிகர் பஹத் பாசிலுக்கு நடிப்பதற்கான வாய்ப்பு அதிகமாக கொடுக்கப்பட்டிருந்தது. அவருக்கான காட்சிகளும் ரொம்பவே மாஸாக அமைந்திருந்தன. அவரது நடிப்பிற்கு ரசிகர்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தெலுங்கு நடிகை ருஹானி சர்மா புஷ்பா 2 திரைப்படம் பார்க்க தனது குடும்பத்தினருடன் திரையரங்கிற்கு சென்றுள்ளார். பஹத் பாசிலின் அறிமுகக் காட்சியில் அவர் வரும்போது அவர்தானா என்று ருஹாணி சர்மாவுக்கு ஒரு சந்தேகம் வந்துவிட்டதாம்.. அருகில் அமர்ந்திருந்த தனது சகோதரரிடம் இது பஹத் பாசில் தானே என்று கேட்டு தெரிந்து கொண்டாராம்.
இது குறித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள ருஹாணி சர்மா, “நான் பஹத் பாசிலின் தீவிர ரசிகை. இந்தப்படத்தில் அவரது என்ட்ரிக்காக ரொம்பவே ஆர்வமாக காத்துக் கொண்டிருந்தேன். அதுவும் கடைசியில் நிகழ்ந்தது. ஆனால் என்னால் உடனடியாக அதை உணர முடியவில்லை. அதன் பிறகு அருகில் இருந்த என் சகோதரரிடம் இது பஹத் பாசில் தானே என்று கேட்டு தெரிந்து கொண்டேன். அந்த அளவிற்கு பஹத் பாசில் தனது ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தன்னை வித்தியாசமான உருமாற்றம் செய்து கொள்கிறார். அந்த காட்சியை பார்த்ததும் எனக்கு புல்லரித்தது” என்று கூறியுள்ளார்.