புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் | பிளாஷ்பேக் : பராசக்தி உருவான கதை இதுதான் | ஆமீர்கான் விரைவில் மூன்றாவது திருமணம்? | வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' | துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 |
மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் பிரித்திவிராஜ் தொடர்ந்து பல படங்களில் நடித்துக்கொண்டே இன்னொரு பக்கம் தனது விருப்பமான டைரக்சன் துறையில் கால் பதித்து மோகன்லாலை வைத்து 'லூசிபர், ப்ரோ டாடி' என இரு வெற்றி படங்களை கொடுத்து விட்டார். தற்போது லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமான 'எம்புரான்' படத்தையும் மோகன்லாலை வைத்து கடந்த ஒரு வருடமாக இயக்கி வந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் அந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. அன்றைய தினம் தனது கணவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்து அவரது காதல் மனைவி சுப்ரியா, 3 மணி நேர விமான பயணம் செய்து மும்பையில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு தளத்திற்கு நேரில் விசிட் அடித்துள்ளார். அவரது வருகை குறித்து தெரியாத பிரித்விராஜ் அவரை படப்பிடிப்பு தளத்தில் பார்த்தாலும் கூட பெரிய அளவில் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடையவில்லை.. மாறாக நீ மும்பையில் தான் இருக்கியா என்று வெகு சாதாரணமாக கேட்டுள்ளார்.
இதுகுறித்து படப்பிடிப்பு தளத்தில் தனது கணவருடன் எடுத்துக் கொண்ட வீடியோ ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ள சுப்ரியா மேனன் கூறும்போது, “மூன்று மணி நேரம் சிரமப்பட்டு பயணம் செய்து டைரக்டர் சாருக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கலாம் என கடைசி நாள் படப்பிடிப்பிற்காக நேரில் வந்தால் நீ ஏன் வந்தாய் என்று சாதாரணமாக கேட்கிறார்'' என்றும், 'ரொமான்ஸ் இல்லாத கணவன்' என்று ஒரு ஹேஸ்டேக்கையும் குறிப்பிட்டு பிரித்விராஜை கிண்டலடித்துள்ளார் மனைவி சுப்ரியா. ஆனாலும் இவர் பகிர்ந்து கொண்டுள்ளார் வீடியோ கணவன் மனைவி இருவருக்கும் இடையே எப்படிப்பட்ட ரொமான்ஸ் இருக்கிறது என்பதை தானாகவே சொல்லிவிட்டது என ரசிகர்கள் இது குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.