2006ல் வெளியான மதராசி என்ற படத்தில் தமிழுக்கு வந்தவர் வேதிகா. அதன் பிறகு முனி, பரதேசி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சமீபத்தில் பிரபு தேவா நடிப்பில் திரைக்கு வந்த பேட்ட ராப் என்ற படத்திலும் நடித்திருந்தார். தற்போது கஜானா என்ற தமிழ் படத்தில் நடித்து வரும் அவர், தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் வேதிகா, சமீபத்தில் தான் மாலத்தீவுக்கு சென்றபோது பிகினி உடையில் அங்குள்ள எழில் மிகுந்த கடற்கரையில் வலம் வந்துள்ளார். அப்போது தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவர் இணையப்பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் கவர்ச்சியின் உச்சமான இந்த டூ பீஸ் புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது .