ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு | இப்போதைக்கு லோகா.. அடுத்து இன்னொரு படம் வரும் : பிரித்விராஜ் ஆருடம் | திரிஷ்யம் 3 மலையாளத்தில் தான் முதலில் வெளியாகும் : ஜீத்து ஜோசப் திட்டவட்டம் | பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி |

தமிழகத்தில் லாட்டரி விற்பனைக்கு தடை இருந்தாலும் பக்கத்து மாநிலமான கேரளாவில் அரசு லாட்டரி விற்பனையை அங்கீகரித்துள்ளது. இந்த நிலையில் பிரபல நடிகரும், இயக்குனர் சிவாவின் தம்பியுமான நடிகர் பாலாவின் மனைவி வாங்கிய லாட்டரிக்கு 25 ஆயிரம் ரூபாய் பரிசு விழுந்துள்ளது. ஏற்கனவே மூன்று திருமணங்கள் செய்து அவர்களிடம் இருந்து பிரிந்து தற்போது நான்காவது தனது உறவுக்கார பெண்ணான கோகிலா என்பவரை கடந்த வருடம் திருமணம் செய்தார் நடிகர் பாலா. தற்போது அவர்கள் கேரளாவில் வசித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் பாலாவின் மனைவி வாங்கிய லாட்டரிக்கு இந்த பரிசு கிடைத்துள்ளது. லாட்டரி ஏஜென்ட் வீடு தேடி கொண்டுவந்து கொடுத்த பணத்தை வாங்கி தன் மனைவியிடம் ஒப்படைக்கும் பாலா, இந்த பணத்தைக் கொண்டு இல்லாதவர்களுக்கு நல்ல விஷயங்களை செய் என்று கொடுக்க அவரது மனைவியும் அதை புன்முறுவலுடன் ஏற்றுக்கொள்கிறார். இது குறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. குறிப்பாக இந்த வீடியோவில் மனைவியிடம் உனக்கு பிடித்ததாக ஏதாவது வாங்கிக்கொள் என்று சொல்லாமல் இல்லாதவர்களுக்கு ஏதாவது நல்லது செய் என பாலா கூறியது ரசிகர்களிடம் பாராட்டுகளை பெற்று வருகிறது.