ரூ.5.9 கோடி சொத்து ஆவணம் தாக்கல் செய்யுங்க : ரவி மோகனுக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி | கட்டுப்படுத்த முடியவில்லை, நிறைய பரோட்டா சாப்பிட்டேன் : நித்யா மேனன் | இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடி வசூலைக் குவித்த ‛எப் 1' | இட்லி கடை படத்தின் முதல் பாடலின் அப்டேட் தந்த ஜி.வி.பிரகாஷ் | 'பிளாக்மெயில்' புதுவித அனுபவமாக அமைந்தது : தேஜூ அஸ்வினி | 3 நாயகிகள் இணையும் 'தி வைவ்ஸ்' | வேலு பிரபாகரனின் கடைசி படம் | பிளாஷ்பேக் : 450 படங்களுக்கு இசை அமைத்த டப்பிங் கலைஞர் | பிளாஷ்பேக் : சிங்கள சினிமாவின் ஆஸ்தான இசை அமைப்பாளர் | ஆக்ஷன் படங்கள் பண்ண ஆசை : திரிப்தி திம்ரி |
அன்றைய இசை உலகில் எம்.எஸ்.சுப்புலட்சுமி, டி.கே.பட்டம்மாள் முன்னணியில் இருந்தபோது அவர்களுக்கு இணையான திறமையோடு வலம் வந்தவர். என்.சி.வசந்தகோகிலம். டி.கே.பட்டம்மாள் போன்ற பின்னணியோ, எம்.எஸ்.சுப்புலட்சுமி போன்ற அழகோ இல்லாததால் கடைசி வரை அவரது வாழ்க்கை போராட்டமாகவே இருந்தது.
காமாட்சி, அவரது இயற்பெயர், கேரளாவில் உள்ள இரிஞ்சாலக்குடாவின் பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர், ஆனால் அவரது குடும்பம் நாகப்பட்டினத்தில் குடியேறியது. அவரது தந்தை அவருக்கு நாகபட்டணத்தில் பாரம்பரிய கர்நாடக இசையில் பயிற்சி அளித்தார். அப்போது பிரபல இயக்குனராக இருந்த கே.சுப்பிரமணியம் ஒரு முறை நாகப்பட்டினம் சென்றபோது காமாட்சியின் திறமையை கண்டு வியந்து 'சென்னை வாருங்கள் சினிமா வாய்ப்பு தருகிறேன்' என்று சொல்லிவிட்டுப்போனார்.
இதை நம்பி காமாட்சியும், அவரது தந்தையும் சென்னை வந்தார்கள். அந்த நேரத்தில் கே.சுப்பிரமணியம் மும்பையில் ஒரு படப்பிடிப்பில் இருந்ததால் அவரை சந்திக்க முடியவில்லை. சென்னை மெரினா பீச்சில் பல நாட்கள் படுத்துறங்கி காலத்தை கழித்தார்கள், தெருக்களில், கோவில் வாசலில் பாடி வாழ்ந்தார்கள்.
பின்னர் நண்பர் ஒருவரின் உதவியால் சென்னை புறநகரில் ஒரு சிறிய வீட்டில் வாழ்ந்து கொண்டே பாட வாய்ப்பு தேடினார்கள். ஆங்காங்கே நடந்த சின்ன சின்ன இசை போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிகளை குவித்தார் காமாட்சி, இதன் மூலம் கவனம் பெற்றவர், பெரிய கச்சேரிகளில் பாட ஆரம்பித்தார், இசை தட்டு கம்பெனிகள் அவரை அழைத்து வாய்ப்பு கொடுத்தது.
எம்.எஸ்.சுப்புலட்சுமி போன்று சினிமாவில் நடிக்க விரும்பிய அவர் அதற்கான முயற்சிகளை செய்து 1940 களில் படங்களில் நடித்தார். "ஹரிதாஸ்" (1944), "வால்மீகி" (1946) "கனகவதர்" (1942), "வேணுகானம்" (1941), மற்றும் "கிருஷ்ண விஜயம்" (1950). அவர் நடித்தவற்றில் முக்கியமானவை. திரைப்படத்தில் புகழ்பெற்றதும், கணவர் இவரை பிரிந்தார். கடைசி வரை தனிப்பட்ட வாழ்க்கை அவருக்கு கசப்பாகவே இருந்தது. எம்.எஸ்.சுப்புலட்சுமியின் அசுர வளர்ச்சியை வசந்தகோகிலத்தால் எதிர்த்து நிற்க முடியவில்லை. அதற்கான பின்புலம் அவரிடம் இல்லை. கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் அவர் தனிமைப்படுத்தப்பட்டார். 1951ம் ஆண்டு தனது 32வது வயதில் காசநோயிடம் தோற்று மரணம் அடைந்தார்.