ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு : அக்., 30ல் தீர்ப்பு | பிளாஷ்பேக் : தாணுவுக்காக கவுரவ தோற்றத்தில் தோன்றிய ரஜினி | ரஜினி, கமல் மாதிரி தனுஷ், சிம்பு இணைகிறார்களா? | தமிழ் படங்களை புறக்கணிக்கிறாரா? சாய்பல்லவிக்கு என்னாச்சு? | யுவன் சங்கர் ராஜா இசை சுற்றுப்பயணம் | 'அங்காடி தெரு' மகேஷ் நடிக்கும் 'தடை அதை உடை' | ரஜினிகாந்த் மனசு மற்ற ஹீரோக்களுக்கு இல்லையே! | ஸ்வேதா மேனன் மீது நடவடிக்கை எடுக்க தடை நீடிப்பு | நடிகர் சங்க புதுக்கட்டடம்: விஜயகாந்த் பெயர் வைக்க சிக்கலா? | மருதத்தில் ஏமாற்றப்படும் விவசாயிகளின் கதை: விதார்த் |
திறமை மிகு ஒளிப்பதிவாளர்கள் பலர் கோலோச்சியிருந்த இந்த தென்னிந்திய திரையுலகில், சினிமாவை முழுமையாகப் புரிந்து கொண்டு, அதை நேசித்து, அதையே தனது சுவாசம் என நினைத்து கலையுலகில் பயணித்த ஒளிப்பதிவாளர்கள் வெகு சிலரில், மிகவும் முக்கியமான ஒருவர் என்றால் அது சந்தேகத்திற்கிடமின்றி ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
1972ம் ஆண்டு வெளிவந்த “பனிமுடக்கு” என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக தனது கலையுலகப் பயணத்தை ஆரம்பித்த இவர், 20 திரைப்படங்களுக்கும் மேல் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து, அதன் பின் 1977ம் ஆண்டு “கோகிலா” என்ற கருப்பு வெள்ளை கன்னடத் திரைப்படத்தை இயக்கியதன் மூலமாகத்தான் ஒரு இயக்குநர் என்ற அவதாரம் எடுத்தார்.
தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக பணிபுரிந்து கொண்டிருந்த காலகட்டத்தில் இயக்குநர் என்ற அஸ்திரத்தை கையில் எடுக்க காரணமாக அமைந்த இந்த “கோகிலா” திரைப்படத்தின் வாயிலாகத்தான் மோகன் ஒரு நடிகராக இயக்குநர் பாலுமகேந்திராவால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டு, வெள்ளித்திரையில் களம் கண்டார். அதுவரை ஒரு மேடை நாடகக் கலைஞராக இருந்து வந்த நடிகர் மோகன், “கோகிலா” திரைப்படத்திற்காக புதுமுகங்களைத் தேடி கொண்டிருந்த இயக்குநர் பாலுமகேந்திராவிற்கு தனது புகைப்படத்தை அனுப்பி, அதன் மூலம் படத்தின் நாயகனான நடிகர் கமல்ஹாசனின் நண்பன் கதாபாத்திரம் ஏற்று நடிக்கும் வாய்ப்பு கிடைக்கப் பெற்று ஒரு நடிகரானார்.
தமிழிலிருந்து நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் பாலுமகேந்திரா, மலையாளத்திலிருந்து நடிகை ஷோபா, தெலுங்கிலிருந்து நடிகை ரோஜா ரமணி, கன்னடத்திலிருந்து நடிகர் மோகன், வங்காளத்திலிருந்து இசையமைப்பாளர் சலீல் சவுத்ரி என ஐந்து வெவ்வேறு மொழி திரைப்படத் துறையிலிருந்து கலைஞர்கள் ஒன்றிணைந்து பயணித்த ஒரு காவியப் படைப்பாக வந்ததுதான் இந்த “கோகிலா” திரைப்படம்.
இப்படி ஒரு அருமையான திரைப்படத்தை ஏன் தமிழில் எடுக்காமல் கன்னடத்தில் எடுத்தார் பாலுமகேந்திரா? என்ற கேள்வி சினிமாவை நேசிக்கும் ஒவ்வொருவரிடமும் எழத்தான் செய்தது. இந்தத் திரைப்படம் வெளியான 70களின் பிற்பகுதி காலகட்டங்களில் இதுமாதிரியான வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களை தமிழ் ரசிகர்கள் வரவேற்பார்களோ? மாட்டார்களோ? என்ற ஒரு சின்ன தயக்கம்தான் படத்தை கன்னடத்தில் எடுக்க முற்பட்டார் இயக்குநர் பாலுமகேந்திரா.
1977ம் ஆண்டு அக்டோபர் 7 அன்று வெளிவந்த இத்திரைப்படம், கன்னடத்தில் பெரும் வெற்றியைப் பெற்றது மட்டுமின்றி, தமிழில் மொழி மாற்றம் செய்யப்படாமலேயே சென்னையில் 100 நாள்கள் வரை ஓடிய முதல் கன்னடப் படம் என்ற பெருமையோடு, தமிழிலும் தனது வெற்றியைப் பதிவு செய்தது. படம் வெளிவந்து மூன்றாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சென்னையில் திரையிடப்பட்டு 140 நாள்கள் வரை ஓடி, ஒரு புதிய சாதனையைப் படைத்த திரைப்படமாகவும் பார்க்கப்பட்ட திரைப்படம்தான் இந்த “கோகிலா”.
மேலும் இந்தியாவின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இத்திரைப்படம், சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதினையும், சிறந்த திரைக்கதைக்கான கர்நாடக அரசு விருதினையும் இயக்குநர் பாலுமகேந்திராவுக்கு பெற்றுத் தந்ததோடு, கருப்பு வெள்ளையில் வெளிவந்த ஒரு காவியமயமான போற்றுதலுக்குரிய திரைப்படம்தான் இந்த “கோகிலா”.