அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மற்றும் பலர் நடிக்கும் 'புஷ்பா 2' படம் டிசம்பர் 5ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் சென்னை புரமோஷன் நிகழ்ச்சி நேற்று சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் ஏராளமான ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இப்படத்தின் பாடல்களுக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஆனால், பின்னணி இசையை அவர் அமைக்கவில்லை. அவருக்குப் பதிலாக வேறு சில இசையமைப்பாளர்கள் அமைத்துள்ளதாகத் தகவல் வெளியானது. ஆனால், இதுவரையில் அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இதனிடையே, நேற்று சென்னையில் நடைபெற்ற விழாவில் பேசிய இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் வெளியான சர்ச்சைகளுக்குப் பதிலளிக்கும் விதமாகப் பேசினார்.
“ரவி சார், நான் சரியான நேரத்தில் பாடல்களைத் தரவில்லை, பின்னணி இசையைத் தரவில்லை என என் மீது குற்றம் சுமத்தினீர்கள். நீங்கள் என் மீது அன்பு செலுத்துபவர். எங்கு அன்பு உள்ளதோ அங்கு குற்றச்சாட்டுக்களும் இருக்கும். ஆனால், என் மீதான அன்பை விட உங்கள் குற்றச்சாட்டுக்கள்தான் அதிகமாக உள்ளது. “தவறான நேரம், நான் லேட்' என நீங்கள் கூறுகிறீர்கள். நான் என்ன செய்ய முடியும். இப்போது கூட 25 நிமிடங்களுக்கு முன்பே வந்துவிட்டேன். ஆனால், குறிப்பிட்ட சமயத்தில்தான் நான் கேமரா என்ட்ரி தர வேண்டும் என என்னை அனுமதிக்கவில்லை.
மேடை மீது இவற்றை டிஸ்கஸ் செய்யத் தேவையில்லை. நான் மேடையில் பேசினால் அது என்னைத்தான் தாக்கும். இருந்தாலும் நான் ஓபனாக இருக்க விரும்புகிறேன்,” என வெளிப்படையாகப் பேசினார்.
புஷ்பா 2 பின்னணி இசை சர்ச்சையால் தேவி ஸ்ரீ பிரசாத் மனதளவில் எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. இருந்தாலும் நேற்று அவர் மேடையில் வெளிப்படையாகப் பேசியிருப்பதும் இப்போது சர்ச்சையாகி உள்ளது.