குட் பேட் அக்லி ஓடிடி வெளியாகும் தேதி | வெளிவரும் முன்பே வெற்றிக்கு வழிவகுத்த "கேங்கர்ஸ்" | திரைப்பட விழாவில் 'சந்தோஷ்': மத்திய அரசு அனுமதிக்குமா? | சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? |
ஒரு காலத்தில் தயாரிப்பாளர் 'ஏ.எல்.எஸ்' (ஏ.எல்.சீனிவாசன்) என்றால் சினிமாவே அதிரும். அந்த அளவிற்கு டெரர் பார்ட்டியாக வலம் வந்தவர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிறுகூடல்பட்டி என்னும் குக்கிராமத்தில், சாத்தப்ப செட்டியாருக்கும் விசாலாட்சி அம்மைக்கும் 1923ல் மகனாகப் பிறந்தவர் சீனிவாசன். கவியரசர் கண்ணதாசனின் உடன் பிறந்த சகோதரர்.
எட்டாம் வகுப்பு வரைதான் படித்தார். 1941ல் அஜாக்ஸ் கம்பெனியில் குமாஸ்தாவாக பணியாற்றினார். சிறு வயதிலிருந்தே திரைப்படங்களைக் காண்பதில் இருந்த ஆர்வத்தினால், சொந்தமாக திரைப்படம் தயாரிக்க விரும்பினார். திரைப்பட விநியோகஸ்தரின் பிரதிநிதியாகி அதற்கான அனுபவங்களை கோயமுத்தூர் பிக்சர்ஸில் வளர்த்துக் கொண்டார். பிறகு 1951ல் 'மதராஸ் பிக்சர்ஸ்' என்னும் நிறுவனத்தை நண்பர்களுடன் சேர்ந்து தொடங்கினார். நகைச்சுவை நடிகர், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் இயக்கத்தில் 'பணம்' என்கிற படத்தை முதலாவதாகத் தயாரித்து வெற்றி கண்டார். இந்த நிறுவனமே பின்நாளில் ஏ.எல்.எஸ்.புரொடக்சன்ஸ் ஆனது.
அதன் பிறகு தமிழில் சக்கரவர்த்தி திருமகள், திருடாதே, அம்பிகாபதி, ஆனந்தி, மணியோசை, சங்கிலித்தேவன், சாரதா, சாந்தி, பட்டணத்தில் பூதம், கந்தன் கருணை, சினிமா பைத்தியம், நியாயம் கேட்கிறோம், லக்ஷ்மி கல்யாணம் போன்ற ஏராளமான திரைப்படங்களைத் தயாரித்தார். திரையுலகில் முதன்முதலாக படத்தயாரிப்பாளர்களுக்கு நெகடிவ் தடுப்புரிமை, விநியோகஸ்தர் உரிமை போன்றவற்றைச் சீர்படுத்திய பெருமை இவருக்குண்டு. பிலிம் சேம்பர் தலைவராகவும் இருந்தார்.
அவரது துணிச்சலுக்கான உதாரணம் இது... எம்.ஜி.ஆர் நடிப்பில் 2 படங்களை தயாரிக்க முயற்சி செய்து இறுதிக்கட்டத்தில் அந்த படங்களின் படப்பிடிப்பை ரத்து செய்துள்ளார். முதலில் எம்.ஜி.ஆர், பத்மினி நடிப்பில் 'ரத்னாவதி' என்ற படத்தை தயாரிக்க தொடங்கினார். இந்த படத்திற்காக, எம்.ஜி.ஆர், பத்மினி நடிப்பில் ஒரு பாடல் காட்சியையும் இயக்குனர் பா.நீலகண்டன் இயக்கியிருந்தார். இப்படி வளந்த இந்த படம் திடீரென ஒருநாள் படப்பிடிப்பு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, 'ஆசீர்வாத்' என்ற பெயரில் ஹிந்தியில் வெளியான படத்தை தமிழில் எம்.ஜி.ஆர் நடிப்பில் ரீமேக் செய்ய முடிவு செய்த ஏ.எல்.சீனிவாசன், படத்திற்கு இயக்குனராக பீம்சிங்கை தேர்வு செய்துள்ளார். ஒருநாள் எம்.ஜி.ஆருக்கு அவரது தோட்டத்தில் பீம்சிங் கதை கூறியுள்ளார். இந்த கதையை கேட்ட எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்து போக, அடுத்தக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்றுள்ளது. ஆனால் படப்பிடிப்பு தொடங்க 10 நாட்கள் இருக்கும்போது திடீரென ஏ.எல்.சீனிவாசன் படப்பிடிப்பை நிறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவரிடம் யாரும் கேள்ளி எழுப்பவில்லை, எழுப்பும் துணிச்சலும் இல்லை. சில நாட்கள் கழித்து ஏன் இந்த படத்தின் படப்பிடிப்பை நிறுத்தினீர்கள் என்று கேட்டபோது, “அந்த படம் நின்றுவிட்டது அவ்வளவுதான். காரணம் கேட்காதீர்கள்” என்று கூறியுள்ளார்.