ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அவரது மனைவி சாய்ரா பானு இருவரும் 29 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு பிறகு தாங்கள் பிரிந்து வாழப் போவதாக அறிவித்துள்ளனர். இந்தநிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் அமீன் அதுகுறித்து வெளியிட்ட பதிவில், எங்களுடைய தனி உரிமையை அனைவரும் மதிக்க வேண்டும். உங்கள் புரிதலுக்கு நன்றி என பதிவிட்டு இருக்கிறார்.
அதையடுத்து ஏ. ஆர். ரஹ்மானின் மூத்த மகள் கதீஜா வெளியிட்டுள்ள பதிவில், ‛அனைவரும் மனதை திடமாக வைத்திருங்கள். கடவுள் உங்களுக்கும் உங்களது குடும்பத்துக்கும் இதை தாங்கக்கூடிய மன வலிமையை கொடுப்பார்' என்று பதிவிட்டுள்ளார்.
அதையடுத்து அவர்களது இளைய மகளான ரஹீமா வெளியிட்டுள்ள பதிவில், ‛இந்த விஷயத்தை தனி உரிமை மற்றும் மரியாதை உடன் நடத்தியதற்கு நன்றி. உங்கள் அனைவரது கருத்துக்கும் நன்றி' என பதிவு போட்டுள்ளார்.