இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளில் 'ஜனநாயகன்' படக்குழு வெளியிட்ட போஸ்டர்! | 'டியூட்' படத்திற்காக இரவு முழுக்க தூங்காமல் பயிற்சி எடுத்த மமிதா பைஜு! | அல்லு அர்ஜுனை தொடர்ந்து 'கேஜிஎப்' நாயகன் யஷை இயக்கும் அட்லி! | ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' |
2024ம் ஆண்டில் பல முன்னணி நடிகர்களின் படங்கள் வெளிவரும் என்ற காரணத்தால் ஆண்டின் துவக்கத்திலேயே இந்த ஆண்டு தமிழ் சினிமாவுக்கு சிறப்பான ஆண்டு என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது பெரும் ஏமாற்றத்தையே தந்தது.
இந்த ஆண்டில் இதுவரையில் 200 படங்கள் வெளிவந்துள்ள நிலையில் அதிக பட்சமாக 15 படங்கள் வரையில்தான் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்ற படங்களாக அமைந்தன. 100 கோடியை வசூலித்த படங்கள் 10க்கும் குறைவான படங்கள்தான்.
இந்த ஆண்டின் அதிகபட்ச வசூலாக விஜய் நடித்து வெளிவந்த 'தி கோட்' படம் 450 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. அதற்கடுத்த இடத்தில் 300 கோடியை சிவகார்த்திகேயன் நடித்த 'அமரன்' படம் நெருங்கி வருகிறது. ரஜினி நடித்த 'வேட்டையன்', கமல் நடித்த 'இந்தியன் 2' ஆகிய படங்கள் 250 கோடியைக் கடந்ததாக சொல்லப்படுகிறது.
தனுஷ் நடித்த 'ராயன்', சுந்தர் சி இயக்கிய 'அரண்மனை 4', விஜய் சேதுபதி நடித்த 'மகாராஜா', விக்ரம் நடித்த 'தங்கலான்' ஆகிய படங்கள் 100 கோடியைக் கடந்தன.
இப்போது சூர்யா நடித்து கடந்த வாரம் வெளியான 'கங்குவா' படம் 100 கோடியைக் கடந்துள்ளது. மூன்று நாளில் இப்படம் 127 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த ஆண்டில் வெளிவந்த படங்களில் 100 கோடியைக் கடந்த 9வது படமாக இப்படம் அந்தப் பட்டியலில் இணைகிறது.
100 கோடியைக் கடக்கவில்லை என்றாலும், சூரி நடித்த 'கருடன்', அருள் நிதி நடித்த 'டிமான்டி காலனி 2', தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடித்த 'லப்பர் பந்து', ஜீவா நடித்த 'பிளாக்' ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்க லாபத்தைக் கொடுத்த படங்களாக அமைந்தன.