நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழ் சினிமாவில் சில நடிகர்கள் சொந்த படத் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து படங்களைத் தயாரித்து வருகிறார்கள். அப்படி நடிகர் சூர்யாவின் சொந்த படத் தயாரிப்பு நிறுவனமாக 2 டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு பல படங்களைத் தயாரித்தது. அந்த நிறுவனத்தின் முழு பொறுப்பையும் சூர்யாவுடன் சிறு வயதிலிருந்தே நண்பராக இருக்கும் ராஜசேகர் பாண்டியன் தான் கவனித்து வந்தார்.
மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருந்த அவர்களது நட்பில் சமீபத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல். அதற்கு முன்பாகவே, 2 டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இனி படத் தயாரிப்பில் ஈடுபடாது என்ற தகவலும் வெளிவந்தது. அந்நிறுவனம் தயாரித்து கடைசியாக வந்த 'ரெட்ரோ' படமும் வியாபார ரீதியாக வசூலைப் பெறவில்லை. இதனிடையே, சூர்யா தரப்பில் 'ழகரம்' என்ற புதிய படத் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார்கள். அது குறித்த செய்தியையும் நாம் இதற்கு முன்பே வெளியிட்டிருந்தோம்.
இனி, 'ழகரம்' தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில்தான் சூர்யா படங்களைத் தயாரிக்கப் போகிறாராம். அந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பு குறித்து தீபாவளி அன்றோ, தீபாவளிக்குப் பிறகோ வெளியாகலாம் என்கிறார்கள்.