லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த மாதம் வெளியான கோட் திரைப்படம் ஓரளவுக்கு வெற்றி படமாகவே அமைந்தது என்றாலும் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவரும் அளவிற்கு அந்த படம் அமையவில்லை என்கிற கருத்தும் பரவலாக இருக்கிறது. படமும் விஜய்யின் முந்தைய லியோ படத்தின் வசூலையே தாண்டவில்லை. இதற்கு படத்தின் கதையும் விஜய்யின் கதாபாத்திரங்களும் மற்றும் அவரது உருவத்தோற்றங்களும் கூட மைனஸ் பாயிண்ட்களாக இருந்தன என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இப்படி ஒரு கதை அம்சத்துடன் கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு முன்பே விஜயகாந்த் நடிப்பில் ராஜதுரை என்கிற படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தை இயக்கியவர் வேறு யாருமில்லை. சாட்சாத் விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் தான்.
இதுகுறித்து இயக்குநர் வெங்கட்பிரபு கூறும்போது, “இப்படி ஒரு படம் வந்திருக்கும் தகவலை கோட் படம் வெளியான பிறகு பலரும் படம் பார்த்துவிட்டு பேச ஆரம்பித்தபோது தான் எனக்கே தெரிய வந்தது. இதுபோன்று தந்தைக்கு எதிரான மகன் என்கிற கரு உலகம் முழுமைக்கும் பொதுவான ஒன்று. அதனால் பல வெளிநாட்டு படங்களில் சொல்லப்பட்ட விஷயங்களை பார்த்தோமே தவிர இங்கே நம் ஊரிலேயே எடுக்கப்பட்ட ராஜதுரை பார்க்காமல் விட்டு விட்டோம். அதை பார்த்து இருந்தால் கோட் படத்தில் சில விஷயங்களை மாற்றி இன்னும் கொஞ்சம் பெட்டராக கொடுத்திருப்போம்” என்று கூறியுள்ளார்.