Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

நடிகர் ராஜேந்திர பிரசாத்தின் மகள் மாரடைப்பால் மறைவு

05 அக், 2024 - 04:07 IST
எழுத்தின் அளவு:
Actor-Rajendra-Prasad-daughter-passes-away-due-to-heart-attack

தெலுங்கு திரையுலகில் கடந்த 45 வருடங்களுக்கு மேலாக பிரபல நடிகராக இருப்பவர் ராஜேந்திர பிரசாத். தமிழில் வாசுகி, கீ, அனபெல்லா சேதுபதி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது மகள் காயத்ரி நேற்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார். இவருக்கு வயது 38. இவருக்கு கணவரும் 10 வயது மகளும் இருக்கின்றனர். இவரது இறுதிச்சடங்கு இன்று நடந்தது. திரையுலகை சேர்ந்த பலரும் ராஜேந்திர பிரசாத்துக்கு தங்களது ஆறுதலை கூறி வருகின்றனர்.

நேற்று படப்பிடிப்பில் இருந்த ராஜேந்திர பிரசாத் தனது மகளுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவலை கேள்விப்பட்டதும் மருத்துவமனைக்கு விரைந்தார். ஆனாலும் அவரால் தன் மகளுடன் ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை.

இதில் ராஜேந்திர பிரசாத்திற்கு கூடுதல் துயரம் என்னவென்றால் மகள் காயத்ரி தங்களை மீறி காதல் திருமணம் செய்து கொண்டதால் சில காலம் அவரிடம் இருந்து மகளின் குடும்பம் பிரிந்து இருந்தது. சமீபத்தில் தான் அனைத்தையும் மறந்து இரு குடும்பமும் ஒன்று சேர்ந்தது. இந்த நிலையில் காயத்ரியின் இந்த திடீர் மறைவு ராஜேந்திர பிரசாத்தை ரொம்பவே பாதித்துள்ளது. காயத்ரியை பார்க்கும்போதெல்லாம் என் அம்மாவை பார்ப்பது போலவே இருக்கும் என்று கண்கலங்கி கூறியுள்ளார் ராஜேந்திர பிரசாத்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
2024க்கான உலகின் மிகச்சிறந்த 25 ஹாரர் படங்களில் 2ம் இடம் பிடித்த பிரம்மயுகம்2024க்கான உலகின் மிகச்சிறந்த 25 ஹாரர் ... தேவரா இயக்குனரை ஒரு மாதத்திற்கு வெளியூருக்கு அனுப்பும் ஜூனியர் என்டிஆர் தேவரா இயக்குனரை ஒரு மாதத்திற்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Muralidharan raghavan - coimbatore,இந்தியா
07 அக், 2024 - 11:10 Report Abuse
Muralidharan raghavan இந்த நாகரீகமான உலகில் ஏன் இன்னும் காதல் திருமணத்தை ஏற்கும் மனப்பக்குவம் பலருக்கும் வருவதில்லை. பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணங்கள் தோல்வி அடைவதில்லையா ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in