ஜூலை 25ல் ‛அவதார் 3' டிரைலர் | இசை நிகழ்ச்சி! கெனிஷா உடன் இலங்கை சென்ற ரவி மோகன் | ‛பராசக்தி' படத்தில் இணைந்த ராணா | வார் 2 படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு | மாரி செல்வராஜின் 'பைசன்' பிஸினஸ் எப்படி? | இறுதிக்கட்டத்தை எட்டிய ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் படம் | இலங்கை தமிழ் படத்தில் டி.ஜே.பானு | புராண அனிமேஷன் படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | வசூலை குவிக்க அடுத்து வருகிறது 'ட்ரான்: ஏரிஸ்' | அனிருத் இசை நிகழ்ச்சி திடீர் ரத்து |
பாலிவுட் சினிமாவில் பல படங்களில் இணைந்து நடித்த ரன்வீர் சிங், தீபிகா படுகோனே ஆகிய இருவரும் காதலித்து கடந்த 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்தார் தீபிகா படுகோனே. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை அவர் வெளியிட்டார். அதோடு கர்ப்பமாக இருந்த போது பிரபாஸ் உடன் கல்கி படத்தில் நடித்து வந்த தீபிகா, அதன் பிறகு நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போது அந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
இந்த நிலையில் சமீபத்தில் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்த நிலையில் தற்போது அந்த குழந்தைக்கு துவா படுகோனே சிங் என பெயர் வைத்திருப்பதாக சோசியல் மீடியாவில் அறிவித்துள்ளார்கள். இதையடுத்து ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.