ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
பாலிவுட்டில் பல சினிமா நடிகர்கள், ஏன் நடிகைகள் கூட சிகரெட் பிடிக்கும் பழக்கமும், குடிப்பழக்கமும் கொண்டவர்கள். இங்குள்ளவர்களைப் போல மறைத்து நடப்பதெல்லாம் அங்கு கிடையாது. வெளிப்படையாகவே தங்களது தனிப்பட்ட பழக்கங்களைக் காட்டிக் கொள்வார்கள்.
பாலிவுட்டின் வசூல் நாயகனாக ஷாரூக்கான் 'செயின் ஸ்மோக்கர்' ஆக இருந்தவர். ஒரு நாளைக்கு 100 சிகரெட்டுகளுக்கும் மேல் பிடிக்கும் பழக்கம் கொண்டவராம். தற்போது ஒரு சிகரெட் கூட பிடிப்பதில்லை என சமீபத்தில் நடந்த ரசிகர்களின் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
தனக்கு மூச்சுத் திணறல் பிரச்சனை இருப்பதாகவும், புகை பிடிப்பதை நிறுத்தினால் அது குறையும் என நிறுத்தியதாகவும் கூறியுள்ளார். இருந்தாலும் மூச்சுத் திணறல் இன்னும் குறையவில்லை. அதே சமயம் புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டுவிட்டதால் அதன் பலனை நன்றாக உணர்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சினிமாவில் நடிகர்கள் புகை பிடிப்பதையும், குடிப்பதையும் பார்த்துத்தான் பலரும் அந்தப் பழக்கத்திற்கு அடிமையாகிறார்கள் என்பது பலரது கருத்து. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் பலரும் புகை பிடிக்கும் போஸ்டர்களைக் கூட தங்கள் பட விளம்பரங்களில் பயன்படுத்தி வருகிறார்கள். மக்கள் மீதான சமூக அக்கறை அவர்களுக்குத் துளியும் இல்லை என சமூக ஆர்வலர்கள் அப்படியான போஸ்டர்கள் வரும் போது கண்டங்களைத் தெரிவிக்கிறார்கள். ஆனால், நடிகர்கள் அதை நிறுத்துவதாகத் தெரியவில்லை.