நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன், இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‛தெறி'. இந்த படத்தை ஹிந்தியில் ‛பேபி ஜான்' என்ற பெயரில் ரீ-மேக் ஆகி உள்ளது. காளீஸ் இயக்க, வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா கபி, ஜாக்கி ஷெரப் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். முராத் கெடானி, ஜோதி தேஷ்பாண்டே ஆகியோருடன் இணைந்து அட்லீயின் மனைவியான பிரியா அட்லீ தயாரித்துள்ளார்.
பேபி ஜான் படம் ஏற்கனவே பிக் சினி எக்ஸ்போவில் கண்காட்சியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கான சிறப்புத் திரையிடலில் மிகப்பெரிய பாராட்டுகளை பெற்றது. இந்த எதிர்பார்ப்போடு இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. தீபாவளி வெளியீடாக ஹிந்தியில் வெளியாகி உள்ள சிங்கம் அகைன் மற்றும் பூல் புலையா 3 ஆகிய படங்கள் வெளியாகி உள்ள தியேட்டர்களில் இந்த படத்தின் டீசர் இணைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. டீசரில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்துள்ளன. கிறிஸ்துமஸ் வெளியீடாக டிச., 25ல் படம் வெளியாகிறது.