ஹாட்ரிக் வெற்றி : மகிழ்ச்சியில் சிம்ரன் | ஜெயிலர் 2வில் யோகிபாபு | என்னை கொல்ல சதி நடக்குது: ஜாக்குவார் தங்கம் அலறல் | இடியாப்ப சிக்கலில் விஜயகாந்த் மகன் திரைப்படம் | நயன்தாராவுடன் இணையும் படத்திற்காக போட்டோஷூட் நடத்திய சிரஞ்சீவி! | தனுஷின் 'குபேரா' படத்தை 50 கோடிக்கு கைப்பற்றிய அமேசான் பிரைம்! | நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் 'ரெட்ரோ' | 'கொம்பு சீவி' படத்திற்காக மதுரை வட்டார தமிழில் டப்பிங் பேசும் சண்முக பாண்டியன்! | விஜய்சேதுபதி நடித்துள்ள 'ஏஸ்' படத்தின் சென்சார் - ரன்னிங் டைம் வெளியானது! | ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி |
ஜூனியர் என்டிஆர் நடிப்பில் சிவா கொரட்டலா இயக்கத்தில் சமீபத்தில் 'தேவரா' திரைப்படத்தின் முதல் பாகம் வெளியானது. ஏற்கனவே வெளியான சில படங்களின் சாயல் இருந்தாலும் கடல் பின்னணியில் உருவான இந்த படம் ஓரளவு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றதுடன் நல்ல வசூலையும் ஈட்டி உள்ளது. இந்த முதல் பாகம் ப்ரீக்வல் ஆக உருவாகியுள்ள நிலையில் இதன் சீக்வல் ஆக இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது.
ஒருவேளை பாகுபலி, சலார் போல படங்களை நீளமாக எடுத்து வைத்துவிட்டு முதல் பாகத்தை வெளியிட்டு விட்டு பின்னர் மீதி உள்ள காட்சிகளுடன் புதிய காட்சிகளை இரண்டாம் பாகத்திற்காக எடுப்பார்களோ என்று தான் பலருக்கும் தோன்றும். ஆனால் இன்னும் தேவரா 2வுக்கான எந்த காட்சிகளும் எடுக்கப்படவில்லை என்பதுடன் அதற்கான காட்சிகளும் இன்னும் முழுமையாக எழுதி முடிக்கப்படவில்லை என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் ஜூனியர் என்டிஆர்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “முதல் பாகம் பெற்ற வெற்றி காரணமாக எங்களுக்கு பொறுப்பு கூடியுள்ளதால் படக்குழுவினர் அனைவருமே சிறிது நாட்கள் ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக இயக்குனர் கொரட்டலா சிவாவை ஹைதராபாத்தை விட்டு ஒரு மாதத்திற்கு வெளியே சென்று தேவரா படத்தை பற்றிய எண்ணத்தையே மறந்து விட்டு ஜாலியாக பொழுது கழிக்குமாறு அனுப்பி வைக்க இருக்கிறேன். அப்போதுதான் அவர் திரும்பி வரும்போது தேவரா 2வை உருவாக்குவதற்கான புத்துணர்ச்சியையும் புதிய கணக்கீடுகளையும் புதிய சக்தியையும் அவரால் உருவாக்கிக் கொள்ள முடியும்” என்று கூறியுள்ளார் ஜூனியர் என்டிஆர்.