மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி மலையாள திரையுலகில் பெண்கள் சந்தித்து வரும் அவல நிலைகளை தோலுரித்துக் காட்டியது. இதைத் தொடர்ந்து மலையாள நடிகர் சங்கமே மொத்தமாக ராஜினாமா செய்யும் அளவிற்கு நிலைமை ரொம்பவே சீரியஸ் ஆனது. பல நடிகர்கள், இயக்குனர்கள் மீது சினிமாவில் இருக்கும் பெண்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இப்படி இந்த ஹேமா கமிஷன் அமைக்கப்படுவதற்கு முக்கிய காரணமே சினிமா பெண்கள் நல அமைப்புதான்..
கடந்த ஏழு வருடங்களுக்கு முன் பிரபல நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான அதிர்ச்சி நிகழ்வை தொடர்ந்து சினிமாவில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக நடிகைகள் ரேவதி, பார்வதி, ரீமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன், இயக்குனர் அஞ்சலி மேனன், கீது மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் சேர்ந்து துவங்கியது தான் இந்த அமைப்பு. இது கொடுத்து அழுத்தத்தினால் தான் இப்படி ஒரு விசாரணையே நடைபெற்றது மேலும் இந்த ஹேமா கமிஷன் தாங்கள் பரிந்துரை செய்துள்ள விஷயங்களை அரசு உடனடியாக திரையுலகில் அமல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த நிலையில் இது தொடர்பாக விவாதிக்க சினிமா பெண்கள் நல அமைப்பை சேர்ந்தவர்கள் சமீபத்தில் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதில் சினிமாவில் பெண்கள் இனி ஒரு சதவீதம் கூட துன்பத்தை சந்திக்கக் கூடாது.. அவர்களின் பாதுகாப்பு 100 சதவீதம் உறுதி செய்யப்பட வேண்டும் என்கிற விதமாக நடிகர் சங்கம் மட்டுமில்லாமல், திரையுலகில் உள்ள பல்வேறு சங்கங்களிலும் பெண்கள் சம்பந்தமாக என்ன மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்பது குறித்து 33 பக்கத்திற்கு ஒரு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. இது விரைவில் கேரள அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று இந்த அமைப்பின் உறுப்பினர்களில் ஒருவராக இயக்குனர் அஞ்சலி மேனன் கூறியுள்ளார்.