டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தெலுங்கு சினிமாவின் முன்னணி இளம் நடிகர் விஜய் தேவரகொண்டா. பேமிலி ஸ்டார் படத்திற்கு பின் கல்கி படத்தில் சிறப்பு தோற்றத்தில் தோன்றினார். தற்போது அடுத்தடுத்து கைவசம் படங்களை வைத்துள்ளார். இப்போது ‛ஷியாம் சிங்கா ராய்' பட இயக்குனர் ராகுல் சாங்கிருத்யன் இயக்கத்தில் அடுத்து நடிக்கவுள்ளார். விஜய் தேவரகொண்டாவின் 14வது படமாக உருவாகும் இதனை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு 2025ம் ஆண்டு துவங்குகிறது. 1850ம் ஆண்டு காலகட்ட படமாக கதை உருவாகிறது.
தற்போது இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் வோஸ்லூவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் ஹாலிவுட்டில் வெளியான ‛மம்மி' சீரியஸ், ‛டார்க் மேன்' சீரியஸ் மூலம் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.




