வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து திரைக்கு வந்திருக்கும் படம் அமரன். மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் சிவகார்த்திகேயன் பேசுகையில், இந்த அமரன் படம் உருவாக காரணமாக இருந்த கமல் சாருக்கு என்னுடைய நன்றி. இந்த படம் உருவாகி வந்த இரண்டு ஆண்டுகளில் அவ்வப்போது கமல் சாரை சந்தித்தேன். இந்த படம் திரைக்கு வந்ததும் எனக்கு கால் பண்ணிய கமல் சார் படம் பிரமாதமா போயிட்டு இருக்கு. நான் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் சொல்லுங்க என்று சொன்னார். இந்த கதையையும் எங்களையும் நம்பி இவ்வளவு பெரிய தொகையை செலவு செய்து இந்த படத்தை எடுத்த கமல் சாருக்கு என்னுடைய நன்றி. இப்போது வெளிநாட்டில் இருக்கும் கமல் சார், சென்னை வந்ததும் அவரை சந்திப்பதற்கு நான் காத்துக் கொண்டிருக்கிறேன்.
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியை அண்ணன் என்றுதான் அழைப்பேன். அவர் என்னை தம்பி என்பார். இப்போது எங்களுக்கு இடையிலான ரிலேஷன்ஷிப் இன்னும் நெருக்கம் ஆயிடுச்சு. இந்த படத்தின் கதையை கேட்டதிலிருந்து படம் திரைக்கு வருவது வரை ஒரு துளி சந்தேகம் கூட எனக்கு ஏற்படவில்லை. அந்த அளவுக்கு அமரன் கதை மீது மிகப்பெரிய நம்பிக்கை இருந்தது. இந்த கதைக்காக ஓராண்டு ரிசர்ச் செய்தார் இயக்குனர். இந்த படத்தை பார்த்தவர்கள் எல்லாம் மணிரத்னம் படத்தை பார்த்த மாதிரி இருக்கிறது என்று சொன்னார்கள். இதை விட பெரிய சந்தோஷம் ராஜ்குமார் பெரியசாமிக்கு எதுவும் இருக்க முடியாது. படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஹோட்டலுக்கு சென்றாலும் கூட இரவெல்லாம் தூங்கவே மாட்டார். நாளை படப்பிடிப்பில் என்ன செய்ய வேண்டும் என்று யோசித்துக் கொண்டே இருப்பார். அந்த அளவுக்கு பேய் மாதிரி அவர் வேலை செய்தார்.
இந்த படத்திற்கு கிடைத்த அனைத்து கிரிடிட்டையும் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியே எடுத்துக் கொள்ளட்டும். எனக்கு இந்த படம் பண்ண கிடைத்த வாய்ப்பே மிகப் பெரியது. மேலும், தலைவர் ரஜினி சாரை சந்தித்தபோது, படத்தில் எங்குமே சிவகார்த்திகேயனே தெரியவில்லை. அந்த அளவுக்கு பர்பார்ம் பண்ணி இருந்தீர்கள். மாவீரன், டாக்டர், அயலான், அமரன் என மாறுபட்ட படங்கள்ல நடிக்கிறீங்க. நீங்க எப்படி யோசிக்கிறீங்கன்னே எனக்கு தெரியலன்னு ரஜினி சார் சொன்னார்.
இந்த படத்தில் சாய் பல்லவி ஹீரோயின் என்றதும் ரொம்ப சந்தோஷப்பட்டேன். என்னதான் படத்தில் பிசிக்கலா, மென்டலா இந்த மேஜர் ரோலுக்காக நான் உழைப்பை போட்டாலும் , கடைசி பத்து நிமிஷத்துல ஹோல்ட் பண்றதுக்கு ஒரு நல்ல ஒரு பர்பாமர் வேணும். இந்த ரெண்டும் சரியா இருந்தாதான் படமும் சரியா இருக்கும். அதை சரியா செய்தார் சாய்பல்லவி. அதோட குடும்பம் குழந்தைகளுடன் அனைவரும் பார்க்கக்கூடிய ஒரு சிறந்த படமா இந்த படம் வந்திருக்கிறது. முக்கிய காரணம் அந்த கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடிச்சது தான்.
அதோட இந்த படத்துல எங்களுக்கு இடையே நெருக்கமான எந்த காட்சிகளும் கிடையாது. மேலும் ஏற்கனவே பல மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிற சாய் பல்லவிக்கு இந்த படம் தமிழ்ல இன்னும் ஒரு முக்கியமான படம். இதுக்கப்புறம் சாய் பல்லவிக்கு இன்னும் பெரிய அளவுல கதாபாத்திரங்கள் கிடைக்கும். இந்த படத்தில் நடித்த அவருக்கு விருதுகளும் கிடைக்கும் என்று பேசிய சிவகார்த்திகேயன், இந்த படத்தில் சாய் பல்லவியுடன் இணைந்து நடித்தது ரொம்ப சந்தோஷம். இந்த படம் மலர் டீச்சரை தாண்டிவிட்டது. அப்படி ஒரு வேடத்தில் அவர் என் படத்தில் நடந்ததற்கு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி .
மேலும், இந்த அமரன் படத்தில் நான் நடித்ததற்கு முக்கிய காரணம் எனது தந்தைதான். அவர் ஒரு கண்காணிப்பாளராக இருந்தவர். நேர்மையான அதிகாரி என்ற பெயர் பெற்றவர். என் தந்தை மறைந்து 21 ஆண்டுகளான நிலையில் அவரோட நினைவில் மட்டும் தான் வாழ்ந்து வருகிறேன். இந்த அமரன் படத்தின் மூலம் அவரை மீண்டும் பார்ப்பதற்காக ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. மேஜர் முகுந்த் வரதராஜனை போன்றுதான் என் தந்தையும். இந்த அமரன் படத்தின் கிளைமாக்சில் நடந்தது போலவே என்னுடைய வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது. அதனால் தான் இந்த படத்தின் கதையை உணர்ந்து அதை உள்வாங்கி என்னால் நடிக்க முடிந்தது.
இவ்வாறு சிவகார்த்திகேயன் பேசினார்.