500 கோடி நிகர வசூலைக் கடந்த 'ச்சாவா' | சினிமா துறையில் பாலின பாகுபாடு: மாதுரி தீக்சித் கவலை | பிரபு, வெற்றி இணைந்து நடித்து ரிலீசுக்கு தயாரான 'ராஜபுத்திரன்' | 'ஹிட் 3' பார்க்காதீர்கள்: நானி சொன்ன காரணம் தெரியுமா? | ''ரசிகர்கள் மாறிவிட்டாங்க...'': ஷில்பா ஷெட்டி | 'அவள்' பட இயக்குனருடன் இணைகிறாரா ரவி மோகன்? | பராசக்தி இந்த காலகட்டத்திற்கு பொருந்தும்! - ஆகாஷ் பாஸ்கரன் | தென்னிந்திய சினிமாவில் ஆண்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்! - ஜோதிகா வெளியிட்ட தகவல் | இந்த வாரமும் இத்தனை படங்களா ? தூங்கும் சங்கங்கள்… | பிளாஷ்பேக்: பானுமதி நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் சாவித்திரி நடித்து வெற்றியை பதிவு செய்த “மிஸ்ஸியம்மா” |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கன்னட திரையுலகின் பிரபல நடிகராக இருக்கும் நடிகர் தர்ஷன் தனது ரசிகரான ரேணுகா சாமி என்பவரை தனது பண்ணை வீட்டில் வைத்துக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது காதலி பவித்ரா கவுடா மற்றும் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்தவர்கள் உள்ளிட்ட 17 பேர் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டனர். முதலில் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த தர்ஷன் அங்கே முறைகேடாக வசதிகளை பெற்றார் என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து தற்போது பெல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தற்போது சிறையில் 100 நாட்களை கழித்து விட்ட தர்ஷன் தொடர்ந்து தனக்கு ஜாமீன் கேட்டு மனு செய்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனக்கு ஜாமீன் வழங்குமாறு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம் வரும் செப்டம்பர் 27ம் தேதிக்கு அதன் விசாரணையை தள்ளி வைத்தது. அதேசமயம் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 15, 16, 17 எண் கொண்ட குற்றவாளிகள் மூவருக்கு மட்டும் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.