பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

மலையாளத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் ஷோபா விஸ்வநாத். இவர் தற்போது ஒரு பிரபல சேனலில் நடைபெற உள்ள 'பிரிட்டிஷ் மலையாளி மிஸ் கேரளா யூரோப் 2025' என்கிற பேஷன் ஷோவில் நடுவராக பொறுப்பேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியின் துவக்க நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பிரபல இளம் நடிகரும், இயக்குனருமான தியான் சீனிவாசன் கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளர் லட்சுமி நட்சத்திரா என்பவருடன் சேர்ந்து கொண்டு ஷோபா அங்கிருந்த போட்டியாளர்களிடம், உங்களுக்கு யாரைப் பிடிக்கும் என்று டக்குனு சொல்லுங்கள் எனக் கூறி சில கேள்விகளை கேட்டார்.
அப்படி அவர் ஒரு போட்டியாளரிடம், “உங்களுக்கு மஞ்சு வாரியர் பிடிக்குமா? காவ்யா மாதவன் பிடிக்குமா ?” என்று ஒரு கேள்வியை எழுப்பினார். நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவி தான் மஞ்சு வாரியர் என்பதும் அவரை விவாகரத்து செய்துவிட்டு தான் தன்னுடன் பல படங்களில் இணைந்து நடித்த காவ்யா மாதவனை அவர் திருமணம் செய்து கொண்டார் என்பதும் பலருக்கும் தெரியும். அதனால் இப்படி ஒரு கேள்வியை கேட்டதும் போட்டியாளர்கள் கொஞ்சம் பதில் சொல்ல தயங்கினார்கள்.
உடனே நடிகர் தியான் சீனிவாசன் குறுக்கிட்டு, “அடுத்ததாக என்ன கேள்வி கேட்கப் போகிறீர்கள்.. உங்களுக்கு யாரை பிடிக்கும் ? திலீப்பையா ? பல்சர் சுனிலையா என்று தானே கேட்கப் போகிறீர்கள் ?” என்று காமெடியாக கேட்டதும் ஷோபாவும் நிகழ்ச்சி தொகுப்பாளரும் அதிர்ந்து போனார்கள். காரணம் நடிகை கடத்தல் வழக்கில் சிக்கி தான், நடிகர் திலீப் சிறை சென்று வந்தார். இந்த கடத்தல் வழக்கில் அவருக்கு உதவி செய்ததாக முதல் குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டவர் தான் இந்த பல்சர் சுனில். இவர்கள் இருவரையும் ஒப்பிட்டு அடுத்த கேள்வியை கேட்க போகிறீர்களா என நடிகர் தியான் சீனிவாசன் கேட்டதும் அவருக்கு தர்ம சங்கடம் ஏற்பட்டது.




