தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் |

மலையாள திரையுலகில் கடந்த வருடம் வெளியான நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை காரணமாக நடிகர் சங்கத்தில் மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டு தலைவர் பதவியில் இருந்து மோகன்லால் ராஜினாமா செய்தார். மற்ற நிர்வாகிகளும் ராஜினாமா செய்ததால் அடுத்ததாக விரைவில் நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் தலைவர் பதவிக்கு நடிகை ஸ்வேதா மேனன் போட்டியிட மனு செய்துள்ளார் என்கிற தகவலும் வெளியானது.
இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக தயாரிப்பாளர் சங்கம் குறித்தும் சில தயாரிப்பாளர்கள் குறித்தும் பெண் தயாரிப்பாளர் சான்ட்ரா தாமஸ் தொடர்ந்து தனது எதிர்ப்பை தெரிவித்து வந்தார். இவர் ஒரு நடிகையும் கூட. சில மாதங்களுக்கு முன்பு இவரை தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து நீக்குவதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார் சான்ட்ரா தாமஸ். இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் தற்போதைய பதவி காலம் முடிந்திருப்பதால் புதிய பொறுப்புகளுக்கான விண்ணப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் சான்ட்ரா தாமஸ் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிட நாமினேஷன் செய்துள்ளார். தயாரிப்பாளர் சங்கம் வந்த அவர் பர்தா அணிந்து வந்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அதேசமயம் இது குறித்து அவர் கூறும்போது, “ஏற்கனவே ஒரு முறை தயாரிப்பாளர் சங்கத்தில் கூட்டம் நடந்தபோது அதில் நிர்வாகிகளாக இருந்தவர்கள் ஒரு சிலர் என்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீற முயற்சி செய்தனர். இது குறித்து அப்போதே நான் புகார் அளித்துள்ளேன். அதனால் இப்போது முன் எச்சரிக்கையாக பர்தா அணிந்து வந்து விடுவது நல்லது என்று நினைத்து இதை அணிந்து வந்துள்ளேன். இதுபோல பெண் தயாரிப்பாளர்களுக்கு நிறைய சிக்கல்கள் இங்கே இருக்கின்றன. அதை எல்லாம் தீர்த்து நேர்மையான நிர்வாகத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் தலைவர் தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்துள்ளேன்” என்று கூறியுள்ளார் சான்ட்ரா தாமஸ்.