மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது; மத்திய அரசு அறிவிப்பு | மலையாள சினிமாவில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'லோகா' | சைஸ் ஜீரோ தோற்றத்துக்கு மாறும் தமன்னா | ஜனநாயகன் படத்தில் மூன்று விஷயங்களை எதிர்பார்க்கலாம் : சொல்கிறார் வினோத் | ‛வீரம்' குழந்தை நட்சத்திரம் யுவினா நடிக்கும் ரைட் | 40 வருட இடைவெளி : அன்று நாயகன், இன்று வில்லன் | புதிய படங்களில் தொடரும் இளையராஜா பாடல்கள் | நாளை நடிகர் சங்க பொதுக்குழு : எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, ஜி.வி.பிரகாஷ் கவுரவிப்பு | அனிருத்துக்கும் எனக்கும் போட்டியா : சாய் அபயங்கர் சொன்ன நச் பதில் | 5 படங்கள் ரிலீஸ் ஆகியும் ஓபனிங் இல்லாத முதல்நாள் வசூல் |
கடந்த வருடம் பிப்ரவரி மாதம் மலையாளத்தில் மஞ்சும்மேல் பாய்ஸ் என்கிற படம் வெளியானது. குறைந்த பட்ஜெட்டில், பெரிய அளவில் பிரபலம் இல்லாத நடிகர்களை வைத்து உருவான இந்த படம் கேரளாவில் மட்டுமல்ல தமிழகத்திலும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று 200 கோடிக்கு மேல் வசூலித்தது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த சவுபின் சாஹிர் தான் இந்த படத்தை தனது சகோதரர் மற்றும் நண்பர் ஆகியோருடன் இணைந்து தயாரித்திருந்தார்.
அதேசமயம் எர்ணாகுளத்தை சேர்ந்த சிராஜ் வலயதாரா ஹமீது என்பவர் இந்த படத்தின் தயாரிப்பு செலவுக்காக தான் 7 கோடி ரூபாய் கொடுத்ததாகவும் படத்தில் கிடைக்கும் லாபத்தில் 40 சதவீதம் தனக்கு தருவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும், ஆனால் அந்தத் தொகையை கொடுக்காமல் தன்னை தயாரிப்பாளர்கள் மோசடி செய்து விட்டார் என்றும் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு குறித்த போலீசாரின் விசாரணைக்கு ஆஜரான சவ்பின் சாஹிர் நீதிமன்றம் என்ன உத்தரவிடுகிறதோ அதன்படி செய்வதற்கு தாங்கள் தயாராக இருக்கிறோம் என்று கூறியிருந்தார்.
ஆனாலும் இந்த மோசடி வழக்கில் அவர் கைது செய்யப்படலாம் என்பதால் முன் ஜாமின் கோரி இருந்தார். அவருக்கு முன் ஜாமீனும் வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுதாரர் தரப்பில் அவரது முன் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து நீதிமன்றம் இது ஒன்றும் அவசரகதியில் எடுத்து விசாரிக்கப்பட வேண்டிய கிரிமினல் வழக்கு அல்ல.. அவர்களின் முன் ஜாமீனை ரத்து செய்ய வேண்டியதற்கான அவசியம் எதுவும் இல்லை என்று கூறி புகார்தாரரின் மனுவை தள்ளுபடி செய்தது.