ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் |
தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் அம்பிகா. தற்போது டிவி சீரியல்களிலும், சினிமாவிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இரு தினங்களுக்கு முன்பு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
“ரொம்ப நாளா இங்க வரணும்னு ஆசை. கொஞ்ச நாளாவே இந்த கோயிலைப் பத்தி பேச்சுல வந்துக்கிட்டே இருந்தது. திடீர்னு முடிவெடுத்து இங்க தரிசனத்துக்கு வந்தேன். தரிசனம் ரொம்ப அழகா இருந்தது. இந்த இடம் பார்க்கிறதுக்கு ஆச்சரியமா இருக்கு, ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்றார்.
கோவிலைச் சுற்றி வரும் போது கண்களில் கண்ணீருடனே நடந்து சென்றார். மேலும் அரசியல் குறித்து பேசுகையில், “சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் தவறில்லை. எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா அனைவருமே சினிமாவிலிருந்து வந்தவர்கள்தானே. நான் பிரபலமாக இருக்கேன்னு அரசியலுக்கு வரக்கூடாது. ரசிகர்கள் நிறைய இருக்காங்கன்னு வரக்கூடாது. ரசிகர்கள் வேற நிஜ வாழ்க்கை வேற. மக்களுக்கு நல்லது பண்ணனும்னு நினைச்சி வரணும், மிதப்பு இருக்கக் கூடாது. இறங்கி நடந்து போயி மக்களுக்காக வேலை செய்யணும்” என்றார்.