‛கராத்தே பாபு' டப்பிங்கை துவங்கிய ரவி மோகன் | படையப்பா ரீ ரிலீஸில் வசூல் எவ்வளவு தெரியுமா? | ஆர்யா 40வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | அடுத்த படம் ஜெயிலர் 2 வா? : சந்தானம் அளித்த பதில் | ‛சிறகடிக்க ஆசை' டிவி தொடர் நடிகை தற்கொலை | சரவண விக்ரம் ஹீரோவாக நடிக்கும் ‛டியர் ரதி' | 75வது பிறந்தநாள்: எங்கு இருக்கிறார் ரஜினிகாந்த்? | பிளாஷ்பேக் : சம்பளம் வாங்காமல் நடித்த சிவாஜி, பத்மினி, சாவித்திரி | பிளாஷ்பேக் : நிஜ பாம்புடன் துணிச்சலாக நடித்த ஜெயசித்ரா | படையப்பாவின் படிக்கட்டுகள்... : ரஜினி 75, 50 ஸ்பெஷல் |

சென்னையில் தற்போது கடும் மழை பெய்து வருவதால் பாதிப்புகள் குறித்து உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்க போலீசும், பொதுமக்களும் இணைந்த வாட்ஸ்அப் குழு ஒன்றை அமைத்தது. இந்த குழுவில் இணைய விரும்பிய நடிகை அம்பிகா அதற்கான லிங்கிற்கு சென்று வாட்ஸ்அப் குழுவில் சேர முயன்றபோது அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து வேப்பேரி போலீஸ் கமிஷனர் அலுவலத்திற்கு சென்று துணை கமிஷனர் விஜயகுமாரிடம் இதுகுறித்து முறையிட்டார். கமிஷனர் இது குறித்து விசாரித்தபோது வாட்ஸ்அப் குழுவில் ஆயிரம் பேருக்கு மேல் சேர்க்க இயலாது. அம்பிகாவின் கோரிக்கை தாமதமாக கிடைத்ததால் சேர்க்க முடியவில்லை என்பது தெரிய வந்தது.
அதைதொடர்ந்து சென்னை பெருநகர காவல்துறையின் தன்னார்வலர்கள் குழுவில் நடிகை அம்பிகாவை இணைப்பதாக துணை கமிஷனர் உறுதி அளித்தை தொடர்ந்து மகிழ்ச்சியுடன் திரும்பினார் அம்பிகா.