24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் |
இயக்குனர் மிஷ்கின், நடிகர் நரேனை கதாநாயகனாக வைத்து தமிழில் 'சித்திரம் பேசுதடி, அஞ்சாதே' ஆகிய படங்களை இயக்கியுள்ளார். அதன் பிறகு மிஷ்கின் முகமூடி படத்தில் நரேனை வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார். அதன் பின்னர் நரேன் தமிழில் படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார். நீண்ட இடைவெளிக்கு பின் கைதி, விக்ரம் போன்ற படங்கள் அவருக்கு மீண்டும் புகழ் வெளிச்சம் தந்தது.
இந்த நிலையில் எஸ். தாணு தயாரிப்பில் மிஷ்கின், விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் 'டிரெயின்'. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நீண்ட வருடங்களுக்கு பிறகு மிஷ்கின் இயக்கத்தில் நரேன் நடிக்கின்றார். இதில் போலீஸ் தோற்றத்தில் நரேன் நடிக்கின்றார். ஏற்கனவே இதில் ஜெயராம், நாசர், டிம்பிள் ஹயாதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஓர் இரவில் ரயிலில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து சஸ்பென்ஸ் திரில்லராக இந்த படத்தை எடுத்து வருகிறார் நரேன்.