ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டி பகுதியில் நடைபெற உள்ளது. இது குறித்த ஏற்பாடுகள் தற்போது துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், மாநாட்டில் கலந்து கொள்ள வரும் தனது கட்சி தொண்டர்களுக்கு சில முக்கிய அறிவுரைகளை வழங்கி இருக்கிறார் விஜய்.
இது குறித்து தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், மாநாட்டிற்கு வருகை தரும் கட்சித் தொண்டர்கள் எக்காரணம் கொண்டும் மது அருந்திவிட்டு வரக்கூடாது. சாலையில் வரும்போது மற்ற வாகனங்களுக்கு இடையூறு செய்யக்கூடாது. பெண்கள் மற்றும் பெண் காவலர்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும். இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் சாலைகளில் சாகசங்களில் ஈடுபடக்கூடாது. கிணறு மற்றும் ஆபத்தான வளைவு பகுதிகளில் கவனமாக வரவேண்டும். மருத்துவ குழு மற்றும் தீயணைப்பு துறையினருக்கு வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். பேருந்து மற்றும் வேன்களில் வருபவர்கள் தகுந்த எண்ணிக்கையில் மட்டுமே வர வேண்டும் என்பது உள்ளிட்ட பல முக்கிய அறிவுரைகள் தொண்டர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.