புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
தமிழில் நடிகர் விக்ரமுக்கு பெயர் வாங்கி தந்த காசி மற்றும் என் மன வானில், அற்புதத் தீவு உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பிரபல மலையாள இயக்குனர் வினயன். அதேபோல மலையாள திரையுலகில் மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனர்களின் ஒருவராக அறியப்படுபவர் இயக்குனர் பி உன்னிகிருஷ்ணன். இவர் தற்போது மலையாள திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தில் தலைமை பொறுப்பில் இருக்கிறார். சமீபத்தில் வெளியான ஹேமா கமிஷன் அறிக்கையில் மலையாளத் திரையுலகில் ஒரு சிலர் குழுவாக ஒன்று சேர்ந்து அதிகார மையமாக குறிப்பாக செயல்படுகின்றனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து இயக்குனர் பி உன்னிகிருஷ்ணன் தனது சங்கத்தின் மூலமாக நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீதும் மறைமுகமாக தனது அதிகாரத்தை செலுத்தி வருகிறார் என்று சில இடங்களில் குற்றச்சாட்டு எழுந்தது. அது மட்டுமல்ல 2023ல் கேரள அரசு திரைப்படத்துறையை வழி நடத்துவதற்காக உருவாக்கிய ஆலோசனை குழுவில் இயக்குனர் பி உன்னிகிருஷ்ணனையும் இணைத்துள்ளது.
இந்தநிலையில் இயக்குனர் வினயன், சினிமாவில் தான் படம் இயக்குவதற்கு தொடர்ந்து மறைமுக தடை விதிக்கும் செயல்களில் பி உன்னிகிருஷ்ணன் ஈடுபட்டு வருகிறார் என்றும் மலையாள சினிமாவில் அதிகார வர்க்கமாக செயல்படும் இயக்குனர் பி உன்னிகிருஷ்ணனை இந்த குழுவில் சேர்த்தது ஏன், இது தவறான முன்னுதாரணம் என்று கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.