பக்தி பழமாக, அம்மாவாக நடித்த ராதிகா | என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் | எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம் | ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது |

கடந்த சில வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் சூப்பர்மேன் கதையும்சம் கொண்ட மின்னல் முரளி என்கிற திரைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. கிராமத்தில் இருக்கும் இரண்டு இளைஞர்களுக்கு திடீரென மின்னல் தாக்கி ஒரே நேரத்தில் சூப்பர் மேன் பவர் கிடைக்கிறது. அதை ஒருவர் நல்வழியில் பயன்படுத்துவதும், இன்னொருவர் தீய வழியில் பயன்படுத்துவதும் என வித்தியாசமான கதை அம்சத்துடன் உருவாக்கப்பட்டு இருந்தது. இயக்குனர் பசில் ஜோசப் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் மின்னல் முரளியாக டொவினோ தாமஸ் நடித்திருந்தார். இந்த படத்தை தயாரிப்பாளர் ஷோபியா பால் தயாரித்திருந்தார்.
இதே தயாரிப்பு நிறுவனம் நடிகரும் இயக்குனருமான தியான் சீனிவாசன் நடிப்பில் டிடெக்டிவ் உஜ்வாளன் என்கிற படத்தை தயாரிக்கின்றனர். இங்கே தமிழில் எல்சியு போல ஒரு சினிமாடிக் யுனிவர்சாக உருவாகும் இந்த படத்தில் மின்னல் முரளி கதாபாத்திரங்களும் வந்து போவதாக கதையை உருவாக்கி உள்ளார்களாம்.
இந்த நிலையில் மின்னல் முரளி படத்தின் கதாசிரியர்களான அருண் அனிருத்தன் மற்றும் ஜஸ்டின் மேத்யூ ஆகியோர் இந்த கதாபாத்திரங்களின் உரிமையாளர்கள் நாங்கள் தான். அதனால் மின்னல் முரளி படத்தின் கதாபாத்திரங்களை வேறு படங்களில் பயன்படுத்துவதற்கு மின்னல் முரளி தயாரிப்பாளர் மற்றும் புதிய பட தயாரிப்பில் உடன் இணைந்திருக்கும் நெட்பிளிக்ஸ் நிறுவனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்து உள்ளனர்.
இவர்களது மனுவை விசாரித்த நீதிமன்றம் காப்பிரைட் விதிமீறல் அடிப்படையில் மேற்கண்ட தயாரிப்பு நிறுவனங்களுக்கு மின்னல் முரளி படத்தின் கதாபாத்திரங்களை பயன்படுத்த தடை விதித்துள்ளது.