மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி | பிளாஷ்பேக்: ஒரே கதையை படமாக்க போட்டிபோட்ட தயாரிப்பாளர்கள் | 'விடாமுயற்சி' செய்யாததை செய்த 'குட் பேட் அக்லி' | இந்த வாரம் ஓடிடி-யில் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி? |
தெலுங்கு திரையுலகில் அடுத்ததாக மிகவும் எதிர்பார்க்கப்படும் படம் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகியுள்ள தேவரா. கொரட்டாலா சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்துள்ளதன் மூலம் தெலுங்கு திரை உலகிலும் அடியெடுத்து வைத்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் சைப் அலிகான் வில்லனாக நடித்துள்ளார். ஆர்ஆர்ஆர் படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியாகும் படம் என்பதால் இந்த படம் குறித்து ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு ஏற்கனவே அதிகரித்துள்ளது. அது மட்டுமல்ல இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என்பதும் இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கிறது என்பதும் இன்னும் ஆவலை தூண்டியுள்ளது.
இந்த நிலையில் படம் செப்-27ல் வெளியாக இருக்கும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஜூனியர் என்டிஆர் பேசும்போது, “இந்த படத்தில் இருக்கும் எந்த ஒரு குறிப்பிட்ட காட்சியை பற்றியும் என்னால் வெளிப்படையாக பேச முடியாது. ஆனால் ஒவ்வொரு காட்சியும் பரபரக்கும். குறிப்பாக கடைசி 30 முதல் 40 நிமிடங்கள் தீப்பொறி பறக்கும் விதமாக ரசிகர்களை உற்சாகப்படுத்தும் என்பது மட்டும் உறுதி. இந்த படத்தை ரசிகர்களுக்கு விரைவில் காட்ட வேண்டும் என்கிற ஆவலை அடக்கிக் கொண்டு என்னால் காத்திருக்க முடியவில்லை” என்று கூறியுள்ளார்.