வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
முன்னணி காமெடி நடிகராக இருந்து இப்போது கதையின் நாயகனாக வளர்ந்து இருப்பவர் நடிகர் சூரி. இவருக்கு சொந்தமாக மதுரையில் பல இடங்களில் அம்மன் என்ற உணவகம் செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு கிளையாக அரசு மருத்துவமனையிலும் ஒரு உணவகம் செயல்படுகிறது. மற்ற கிளைகளில் உள்ள உணவுகளின் விலையை விட இங்கு குறைவாக விற்கப்படுகிறது. மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு சில தொண்டு நிறுவனங்கள் உணவு வழங்கி வந்தனர். இதனால் சில சண்டை, சச்சரவுகள், சுகாதார கேடுகள் எழுவதாக கூறப்படுகிறது. இதையடுத்து மாவட்ட கலெக்டரின் உத்தரவால் மருத்துவமனைக்கு உள்ளே சென்று தொண்டு நிறுவனங்கள் உணவு வழங்க தடை விதிக்கப்பட்டது. இதற்கு பொது மக்கள் மத்தியில் அதிருப்தி எழுந்த நிலையில் இப்படி ஒரு தடை உத்தரவு வர காரணமே நடிகர் சூரி மற்றும் அவரது அம்மன் உணவு குழுவினர் என குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் இதை சூரி மறுத்துள்ளார்.
சூரி அளித்த பேட்டியில், அம்மன் ஹோட்டல் குழுமம் மீது நான்கு நாட்களாக தவறான ஒரு தகவல் பரப்பப்படுகிறது. எதனால் இந்த காழ்ப்புணர்ச்சி என தெரியவில்லை. மதுரை அரசு மருத்துவமனையில் சில தன்னார்வலர்கள் வழங்கும் அன்னதானத்தால் நாய்கள் சுற்றி திரிவது, உணவு வீணாவதால் சுகாதாரக் கேடு போன்ற இன்னும் சில பிரச்சனைகள் எழுந்ததால் மாவட்ட நிர்வாகமும், அரசு மருத்துவமனை நிர்வாகமும் அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் அன்னதானம் வழங்க தடை விதித்துள்ளது. ஆனால் மருத்துவமனைக்கு வெளியில் அன்னதானம் வழங்கலாம் எனக் கூறியுள்ளது. இந்தப் பிரச்சனைக்கும், மதுரை அரசு மருத்துவமனையில் சேவை நோக்கத்துக்காக திறக்கப்பட்ட அம்மன் ஹோட்டல் நிர்வாகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை.
என் அம்மா ஒரு முறை மருத்துவமனைக்குச் சென்று விட்டு அங்கு சரியில்லாத உணவு வழங்கப்பட்டதால் காசு செலவை பார்க்காமல் அங்கு தரமான உணவு குறைந்த விலையில் வழங்கும்படி கேட்டுக் கொண்டார். அப்போது அரசு மருத்துவமனையில் ஹோட்டல் நடத்த நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டதால் லாப நோக்கம் பார்க்காமல் குறைந்த விலையில் தரமான உணவு அங்கு வழங்கப்படுகிறது. தற்போது அங்கு மருந்து கொடுப்பவரும் சரி மருந்து எடுப்பவரும் சரி, டாக்டர்களும் நோயாளிகளும் ஒரே நேரத்தில் அமர்ந்து உணவு எடுக்கின்றன.
அந்த அளவுக்கு சேவை மனப்பான்மையோடு உணவு வழங்கும் நான் மற்றவர்களுக்கு உணவு வழங்குவதை அம்மன் ஓட்டல் குழுமம் தடுக்குமா, இந்த விஷயத்தில் தேவையில்லாமல் சூரியன் ஓட்டல் என்ற ஒரே காரணத்திற்காக சிலர் வீணான வதந்திகளை கிளப்பி விடுகின்றனர். இது எனக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தி உள்ளது. அரசு மருத்துவமனையில் அன்னதான வழங்க தடை விதித்ததற்கும், எனக்கும் எந்த அளவு எள்ளளவும் சம்பந்தமில்லை என்பது மட்டுமே உண்மை.
இவ்வாறு சூரி தெரிவித்தார்.